TN School Examination News: 5 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்த ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் உரிய அறிவிப்பினை வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சின்னமலை நகர்பகுதியில் குடிநீர் திட்டத்திற்கான கட்டுமானப்பணிகளை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகள் வரும் திறக்க அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும், 12ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணையும் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறும்.
TN Plus 2 Exam: எந்தெந்த தேர்வுகளுக்கு இடையே எத்தனை நாள் இடைவெளி?
2021 வருட தமிழக சட்டமன்றத் தேர்தலும் நெருங்கி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் வாக்கில் நிலவும் காலநிலை, பல்வேறு பண்டிகைகள், மாணவர்களுக்கான தேர்வுகள் போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்படும். கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வு மையங்களை அதிகரிப்பதிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன.
படிக்கிற பள்ளியிலேயே 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு: தமிழக அரசு பரிசீலனை
இதற்கிடையே, குறுகிய கால இடைவெளியில் +2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதால் மாணவர்கள் தேர்ச்சி பாதிக்கப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”
கெரோனா நோய்த் தொற்றால் மூடப்பட்ட பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியும், முழுமையான கல்வி கற்றல் நிலைக்கு மாணவர்கள் இன்னும் திரும்பாததால் மே 3-ம் தேதி +2 பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பு மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் செயலாகும்.
மே 3-ம் தேதி பொதுத் தேர்வுக்கு இடையில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இரண்டு வாரங்கள் கல்விப் பணி பாதிக்கும். இடையில் சனி, ஞாயிறு போன்ற அரசு விடுமுறை நாட்களும் வரும். மேலும் இதுவரை மாணவர்களுக்கு மாநில வினாத்தாள் மற்றும் வினா வங்கி எதுவும் அரசால் வழங்கப்படவில்லை.
ஆகவே, மாணவர்கள் பொதுத் தேர்வுக்குத் தயாராவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்களாவது அவகாசம் வழங்கி சுலபமான வழிகளில், குறைந்தபட்ச வினாக்களுடன் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாத வண்ணம் பொதுத் தேர்வை ஜூன் ஜூலை மாதங்களில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ” என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Consultation were being held for classes 5 to 8 school examination says k a sengottaiyan
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!