இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET UG) 2023 விண்ணப்ப பதிவு பிப்ரவரி 10 அன்று தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ CUET UG இணையதளத்தில் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
கடந்த வாரத்தில், CUETக்கு பல அறிவிப்புகள் வந்துள்ளன. சமீபத்திய செய்திகளின் சுருக்கம் இங்கே:
இதையும் படியுங்கள்: 37 கல்லூரிகள்… 4016 இடங்கள்… இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் ‘கட் ஆஃப்’ எப்படி இருக்கும்?
AMU, Jamia Millia Islamia பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட படிப்புகளுக்கு CUET தேர்வை ஏற்றுக்கொள்கிறது
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா (JMI) ஆகியவை பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) வழிகாட்டுதல்களைத் தவிர்த்து, UG மற்றும் PG மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில படிப்புகளுக்கு மட்டுமே CUET ஐப் பின்பற்ற முடிவு செய்துள்ளன.
AMU ஆனது CUET மதிப்பெண்களின் அடிப்படையில் எட்டு இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கையை ஏற்கும்: BSc (Hons) Community Science, BA (Hons/Research) ஹிந்தி, பாரசீகம், சமஸ்கிருதம் மற்றும் பெண்கள் படிப்புகள், BVoc - உற்பத்தி தொழில்நுட்பம், BVoc - பாலிமர் மற்றும் பூச்சு தொழில்நுட்பம் மற்றும் BVoc – ஃபேஷன் டிசைன் மற்றும் கார்மென்ட் டெக்னாலஜி.
நுழைவுத் தேர்வுக்கு எந்தெந்த பாடப்பிரிவுகள் தேர்ந்தெடுக்கப்படும் என்பதை ஜாமியா பல்கலைக்கழகம் இன்னும் முடிவு செய்யவில்லை.
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் CUET UG கட்டாயம்
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) AMU மற்றும் Jamia Millia Islamia (JMI) க்கு நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளது, அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களும் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியது.
“UGC அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களையும் அனைத்துப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் CUET மதிப்பெண்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (AMU) CUET-2023 இல் குறைந்த எண்ணிக்கையிலான படிப்புகள்/ பாடப்பிரிவுகளில் பங்கேற்கத் தேர்ந்தெடுத்துள்ளது, கடந்த ஆண்டு செய்யப்பட்டது போல் இது கவனிக்கப்படுகிறது. AMU உட்பட அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களும், CUET 2023 இல் அனைத்து UG படிப்புகளிலும் பங்கேற்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்க வேண்டும், இது மாணவர்களின் நலனுக்காக உள்ளது,” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் CUET கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) தலைவர் எம் ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், “2023 ஆம் ஆண்டு முதல், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களும் அனைத்து யு.ஜி படிப்பு சேர்க்கைகளிலும் CUET மதிப்பெண்களைப் பயன்படுத்த வேண்டும். மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ளூர் மாணவர்கள் போன்ற குறிப்பிட்ட வகை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தாலும், அவர்கள் எல்லாப் பிரிவினருக்கும் CUET மதிப்பெண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,” என்று ஜெகதேஷ் குமார் indianexpress.com கூறினார்.
CUET குறித்து தயக்கம் காட்டும் தனியார் பல்கலைக்கழகங்கள்
BML முஞ்சால் பல்கலைக்கழகம், GD கோயங்கா பல்கலைக்கழகம், லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம் (LPU), Galgotias பல்கலைக்கழகம், SRM பல்கலைக்கழகம் மற்றும் பல பல்கலைக்கழகங்கள் இந்த முறை CUET 2023ஐ ஏற்றுக்கொண்டுள்ளன.
இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறுகளின் வரலாறு மற்றும் சேர்க்கை செயல்முறையில் தாமதம் காரணமாக, அனைத்து பல்கலைக்கழகங்களும் யு.ஜி.சி அறிமுகப்படுத்திய நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொள்வதைப் பற்றி உறுதியாக எதுவும் குறிப்பிடவில்லை.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் தாமதம் ஏற்படாது என்று யு.ஜி.சி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த ஆண்டு CUET UG மே 21- 31 தேதிகளில் நடைபெறும் மற்றும் ஜூன் மாதம் முடிவுகள் அறிவிக்கப்படும். சேர்க்கை செயல்முறை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கலாம் மற்றும் வகுப்புகள் ஆகஸ்ட் 1 க்குப் பிறகு தொடங்கலாம். எனவே, சேர்க்கை செயல்முறையில் தாமதம் ஏற்படக்கூடாது. தேர்வு மையங்கள் பொருத்தமான உள்கட்டமைப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய நாங்கள் ஆரம்பத்திலிருந்தே வேலை செய்கிறோம், இதனால் CUET-UG சீராக நடத்தப்படும்," என்று கூறினார்.
BHU சேர்க்கை 2023
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) இளங்கலை (UG), மற்றும் முதுகலை (PG) படிப்புகளில் சேருவதற்கான பதிவு செயல்முறையை மே 2023 கடைசி வாரத்தில் தொடங்கும். விண்ணப்பதாரர்கள் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET UG 2023) தோன்ற வேண்டும். BHU சேர்க்கைக்கு 2023 விண்ணப்பிக்கவும். CUET 2023 பதிவுக்கு விண்ணப்பதாரர்கள் CUET இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://cuet.samarth.ac.in/ இலிருந்து விண்ணப்பிக்கலாம்.
"தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் அடிப்படையில் அத்தகைய படிப்புகளில் சேர்க்கைக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அவர்கள் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மற்றும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பூர்த்தி செய்தால் சேர்க்கை கிடைக்கும்," BHU கூறியது.
CUET வெளிநாட்டு, NRI, OCI விண்ணப்பதாரர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது
NRI மற்றும் OCI வேட்பாளர்களுக்கு CUET தேர்வை அனுமதிக்க NTA முடிவு செய்துள்ளது. CUET (UG) 2023 இன் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்கள் தேசியத்தை இந்தியன், OCI, NRI அல்லது வெளிநாட்டினராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், வெளிநாட்டு, OCI மற்றும் NRI விண்ணப்பதாரர்களுக்கு வசதியாக, CUET (UG) 2023 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி இந்தியாவுக்கு வெளியே உள்ள 24 நகரங்களிலும் நடத்தப்படும்.
“வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இந்திய பல்கலைக்கழகங்களில் UG படிப்புகளில் சேருவதற்கு CUET-UG கட்டாயமில்லை. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பதற்கு அதன் சொந்த வெளிப்படையான சேர்க்கை செயல்முறையைக் கொண்டிருக்கலாம். இருப்பினும், சில வெளிநாட்டு மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள 24 தேர்வு மையங்களில் CUET-UG எழுத விரும்பினால், அவர்கள் எழுதலாம். இருப்பினும், CUET-UG மதிப்பெண் அல்லது பிற வழிகளைப் பயன்படுத்துவது பல்கலைக்கழகத்தைப் பொறுத்தது, ”என்று ஜெகதேஷ் குமார் indianexpress.com இடம் கூறினார்.
தமிழக மாணவர்களுக்கான அறிவிப்பு
கோவிட் தொற்றுநோய் காரணமாக 'தேர்ச்சி' கருத்துடன் மட்டுமே வழங்கப்பட்டதால், தமிழ்நாடு வாரியத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்போது தங்கள் மதிப்பெண்களை நிரப்ப வேண்டியதில்லை என்று NTA தெளிவுபடுத்தியுள்ளது. கோவிட் பாதிப்பு அதிகரித்ததால், 2021 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இதன் காரணமாக மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை என்றும், அனைத்து பாடங்களிலும் 'பாஸ்' மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்றும் NTA-க்கு தமிழக மாணவர்களிடமிருந்து பல புகார்கள் வந்துள்ளதாக NTA தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து NTA அறிவித்துள்ளது.
புதிய தேர்வு உதவி மையங்கள்
CUET UG 2023ஐ சீராக நடத்துவதை உறுதிசெய்ய, NTA நாடு முழுவதும் தேர்வு உதவி மையங்களைத் தொடங்கியுள்ளது. இந்த மையங்களின் இருப்பிடங்கள் மற்றும் விவரங்கள் அதிகாரப்பூர்வ CUET UG இணையதளத்தில் கிடைக்கும். நாடு முழுவதும் 24 மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் ஒரு பிரத்யேக தொழில்நுட்ப நபர் இருப்பார், அவர் பொறுப்பாளராக இருப்பார் மற்றும் விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவங்களை நிரப்ப உதவுவார். இந்தச் சேவை இலவசம், மாணவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களுக்குத் தேவையான ஆவணங்களுடன் உதவி மையங்களுக்குச் சென்று படிவத்தை நிரப்புவதுதான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.