தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிஞர் அண்ணா நிர்வாக வளாகத்தில் மாணவர் நல மையம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டி.ஜி.பி சைலேந்திர பாபு கலந்து கொண்டு வேளாண் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விஷயங்களையும், ஊக்கமூட்டும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படியுங்கள்: ஆசிரியர்கள் ஒழுங்கா ஸ்கூலுக்கு வர்றாங்களா? சாட்டையை சுழற்றும் பள்ளி கல்வித் துறை
மேலும் இந்நிகழ்வில் மாணவர்கள் அவர்களது கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர், அவை அனைத்திற்கும் சைலேந்திர பாபு பதிலளித்தார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது மாணவர்கள் அவருடன் புகைபடங்கள் எடுத்து கொண்டனர். அப்போது பாதுகாவலர்கள் மாணவர்களை தடுத்த போதிலும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து புகைப்படம் எடுத்து கொண்டு புறப்பட்டார். இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலெட்சுமி மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil