TNDTE Diploma Result 2019 @tndte.gov.in : தமிழ்நாடு பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வுகள் ஒரு வாரத்திற்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளைக் காண, தேர்வர்கள் இணையதளத்தை முற்றுகையிட்டதால் அது முடங்கியது. எனினும் விரைவில் அது சரி செய்யப்படும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி? என்பது ஐஇ தமிழில் தனிச் செய்தியாக புகைப்பட விளக்கத்துடன் தரப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்கள், சுயநிதி பாலிடெக்னிக்கள் ஆகியவவை சுமார் 450-க்கும் மேல் இருக்கின்றன. இவற்றில் லட்சக்கணக்கான மாணவர்கள் டிப்ளமோ என்ஜினீயரிங் பயில்கிறார்கள். இவர்களுக்கு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தேர்வு நடத்துகிறது. ஒற்றைப் படை எண்களான 1, 3, 5-வது செமஸ்டர்களின் தேர்வுகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற்றது.
TNDTE diploma result 2019: தமிழ்நாடு பாலிடெக்னிக் ரிசல்ட்
வழக்கமாக டிசம்பர் கடைசி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகும். இந்த ஆண்டும் இந்தத் தேர்வு முடிவுகளை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எதிர் நோக்கியிருந்தார்கள். தேர்வு முடிவுகள் கடந்த 21-ம் தேதியே வெளியானதாக சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. அது உண்மை அல்ல.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டான tndte.gov.in-ல் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இது தொடர்பான லைவ் செய்திகளை இங்கு காணலாம்.
Live Blog
TNDTE Diploma Result 2019: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டான tndte.gov.in-ல் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின.
இன்று திடீரென தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வ இணையதளமான @tndte.gov.in -ல் வெளியானது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் இணையதளத்தை முற்றுகையிட்டதால் தொடக்கத்திலேயே அது முடங்கியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
பகல் 12.45 மணி வரை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக இணையதளம் முடங்கியே இருக்கிறது. மாணவர்கள் மொத்தமாக ரிசல்ட் பார்ப்பதை குறைத்தால்தான் இணையதளம் சரியாக வாய்ப்பு இருப்பதாகவும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தரப்பில் கூறுகிறார்கள்.
தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்வு முடிவுகளை காண மாணவர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் பற்றிய தகவல்களை ஆங்கிலத்தில் அறிய இங்கு க்ளிக் செய்யவும்.
காலையில் இருந்து இன்னும் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் இணையதளமான tndte.gov.in முடங்கியே இருப்பதால் தேர்வர்கள் அதிருப்திக்கு ஆளானார்கள். மொத்தமாக லட்சக்கணக்கானோர் பார்க்க முற்படுகையில் இதுபோன்ற சிரமம் தவிர்க்க முடியாதது. தேர்வர்கள் பொறுமை காத்து தேர்வு முடிவுகளை பார்க்க வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தரப்பில் கூறுகிறார்கள்.
இணையதளம் முடக்கம் எப்போது சரியாகும்? என கேட்டதற்கு, ஓரிரு மணி நேரம் ஆகலாம் என்கிறார்கள் அவர்கள்.
தமிழ்நாடு பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று அதிகாரபூர்வ இணையதளமான @tndte.gov.in -ல் வெளியானது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் இணையதளத்தை முற்றுகையிட்டதால் தொடக்கத்திலேயே அது முடங்கியது.
இதனால் தேர்வர்கள் தேர்வு முடிவுகளை அறிய முடியாமல் சிரமப்பட்டனர். எனினும் சற்று நேரத்தில் இது சரியாகும் என தேர்வுத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.