/tamil-ie/media/media_files/uploads/2018/07/tnpsc-vao-exam-.............jpg)
Chennai job Fair on jan.24
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக வரும் 24ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை நிருவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று அந்தந்த வேலைவாய்ப்பு முகாமில் நடைபோஎருவது வழக்கம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையானது 'வேலைவாய்ப்பு வெள்ளி'யாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை : ரூ.60,000 வரை சம்பளம்
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் ஒன்றிணைந்து வரும் 24-ம் தேதி (வெள்ளிகிழமை), மிகப்பெரிய அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. 1000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பலனளிக்கும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..
இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. 35 வயதுக்கு உட்பட்டு, குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை வேலையளிப்போர்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழிற் பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின்; விபரத்தினையும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மெட்ராஸ் ஐஐடி வழங்கும் அரிய வாய்ப்பு : 2 மாத ஃபெல்லோஷிப் திட்டம்
இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும், அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.