10/12 வாரியத் தேர்வு தேதிகள் மாற்றப்படாது – சிபிஎஸ்சி திட்டவட்டம்

மூன்று மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் எழுதும் இந்த சிபிஎஸ்இ தேர்வு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது, மாணவர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியமானது.

By: Updated: December 30, 2019, 07:44:10 PM

குடியுரிமை திருத்தம் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற காரணங்களுக்காக நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்  நடத்தப்பப்ட்டு வருகின்றன.  இதனைத் தொடர்ந்து, தேசிய கல்வி நிறுவனங்களும் , மாநில கல்வி நிறுவனங்களும் தத்தம் தேர்வுகளை ஒத்திவைத்து வருகின்ற செய்திகளை நாம் கடந்து வருகிறோம்.

2019ல் யுபிஎஸ்சி-நுழைவுத் தேர்வுகளில் சாதித்த தேர்வர்களின் எழுச்சியூட்டும் கதைகள்

இந்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வாரியத் தேர்வுகள் 2020 பிப்ரவரி 15 முதல் தொடங்கும் என்று சிபிஎஸ்சி சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.தொடர் ஆர்பட்டங்களால், சிபிஎஸ்சி தேர்வுகளும் தள்ளிவைக்கப்படும் என்று பரவலான கருத்தும் பேச பட்டு வந்தது.


ஆனால், இது போன்ற கருத்துகளை சிபிஎஸ்சி வாரியம் சுத்தமாக மறுத்துள்ளது.  மூன்று மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் எழுதும் இந்த சிபிஎஸ்இ தேர்வு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், மாணவர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியமானது என்றும்  தெரிவித்து இருக்கிறது.

வெளிநாடுகளில் மேற்படிப்பு : நம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

1929 சிபிஎஸ்சி தொடக்கப்பட்டத்தில் இருந்து, இதுவரை எந்த காரணத்திற்காகவும் வாரியத் தேர்வுகள் அறிவிக்கபப்ட்ட தேதியில் இருந்து மாற்றபப்டவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஒரு வேளை, பிப்ரவரி மாதமமும் ஊரடங்கு உத்தரவு  அமலில் இருந்தால் , சிபிஎஸ்சி தேர்வுக்கு வரும் மாணவர்கள் தங்கள் அட்மிட் கார்டை காட்டி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வு அறைக்கு வரும் வகையில் ஏற்பாடும் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Due to nationwide caa protest cbse 10 12 boards exams wont be rescheduled cbse confirms

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X