scorecardresearch

சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு; 10, 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு; 33 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

tn govt jobs
tn govt jobs

ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ஆய்வக நுட்புனர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 33 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; அப்ளை பண்ணுங்க!

Senior Tuberculosis Laboratory Supervisor

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் Diploma in Medical Laboratory technology படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 15,000

Lab Technician/ Sputum Microscopist

காலியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

District Public Health Lab

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் Diploma in Medical Laboratory technology படித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 10,000

Tuberculosis Health Visitor

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி : அறிவியலில் இளங்கலை பட்டம் அல்லது 12 ஆம் வகுப்பு மற்றும் MPHW/ LHV/ ANM/ Health worker படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

Accountant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : Graduate in commerce படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

Data Entry operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு மற்றும் Diploma in computer application படித்திருக்க வேண்டும். மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

Driver

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இலகுரக வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்), எண்.38, மாவட்ட காசநோய் மையம், அரசு தலைமை மருத்துவமனை வளாகம், ஈரோடு மாவட்டம் – 638009.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.01.2023

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Erode health department recruitment 2023 for 33 health projects posts apply soon

Best of Express