scorecardresearch

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய வேலை வாய்ப்பு; 10 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்… உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அலுலக உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: ட்ரோன் விமானியாக விருப்பமா? 10-ம் வகுப்பு தகுதி போதும்; தாட்கோ வழங்கும் இலவச பயிற்சி… உடனே விண்ணப்பிங்க!

சுருக்கெழுத்து தட்டச்சர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 20,600 – 65,000

தட்டச்சர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 19,500 – 62,000

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

இரவுக் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://shrc.tn.gov.in/doc/recruitment_030123.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : செயலாளர், மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு, எண்.143, பி.எஸ்.குமாரசாமி சாலை, (கிரீன்வேஸ் சாலை) – சென்னை – 600028.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://shrc.tn.gov.in/doc/recruitment_030123.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu state human rights commission jobs 2023 apply soon

Best of Express