CBSE Class 10 Results: மாணவிகள் தேர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் உயர்வு; ரிசல்ட் செக் செய்வது எப்படி?
சி.பி.எஸ்.இ வாரியம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே மாதம் வெளியிடுகிறது; மாணவிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது; தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்வது எப்படி?
CBSE 10 ஆம் வகுப்பு ரிசல்ட் 2023: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஒவ்வொரு ஆண்டும் 10 ஆம் வகுப்பு தேர்வை வாரியத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நடத்துகிறது. இந்த ஆண்டு, சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்றன. இந்த ஆண்டு மொத்தம் 21.8 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதினார்.
Advertisment
கடந்த 5 ஆண்டுகளில், மாணவிகளின் செயல்திறன் கணிசமாக மேம்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 88.67 சதவீதமாக இருந்தது, இது 2019 இல் சுமார் 3 சதவீதம் (92.45 சதவீதம்) அதிகரித்துள்ளது.
2020ல் 93.31 சதவீத தேர்ச்சியுடன் மாணவிகளின் செயல்திறன் மீண்டும் மேம்பட்டது. 2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 காரணமாக CBSE வாரியத் தேர்வுகளை ரத்து செய்தது மற்றும் மாணவர்களை மதிப்பிடுவதற்கு மாற்று மதிப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆண்டு
மாணவிகள் தேர்ச்சி சதவீதம்
2018
88.67
2019
92.45
2020
93.31
2021
99.24
2022
95.21
2021 ஆம் ஆண்டு மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மிகவும் செங்குத்தான உயர்வைக் கண்டது. இருப்பினும், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக தேர்வுகள் வாரியத்தால் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டில், சி.பி.எஸ்.இ தேர்வுகள் இரண்டு பருவமாக அல்லது செமஸ்டராக நடத்தப்பட்டன. 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் மாணவிகளின் செயல்திறன் சற்று குறைந்துள்ளது, ஆனால் 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டை விட சிறப்பாக இருந்தது. 2022 ஆம் ஆண்டில், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் சுமார் 4 சதவீதம் குறைந்து 95.21 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டு 21 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதி 10ஆம் வகுப்பில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.40 சதவீதமாக இருந்தது. தேர்வுகள் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டன. பகுதி I தேர்வுகள் நவம்பர்-டிசம்பரில் மற்றும் பகுதி II மே-ஜூன் மாதங்களில் நடத்தப்பட்டன. ஜூலை மாதம் முடிவு அறிவிக்கப்பட்டது.