Tamilnadu health and wellness Centre , Education news
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய வகுப்பு மையங்கள் திறக்கப்பட உள்ளன.
Advertisment
இந்த வகுப்பிற்கான பாடத்திட்டங்களை யுனெஸ்கோ மற்றும் தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) வகுத்துள்ளது. இதற்காக என்சிஇஆர்டி நாடு முழுவதிலுமுள்ள பல நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய வகுப்பு மையங்களின் நோக்கம்:
Advertisment
Advertisements
இனி வரும் காலங்களில் கல்வி பாடப்புத்தகத்த்தோடு நின்றுவிடாமல் மாணவர்களின் உடல்/மன ஆரோக்கியம், நல் வாழ்வியில் போன்றவைகளில் கவனம் செலுத்துவதற்காக இந்த வகுப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாலின சமத்துவம், பாதுகாப்பான இணைய பயன்பாடு, போதைப்பொருள் தவிர்த்தல் போன்ற சமூக கோணங்களில் இந்த வகுப்புகள் கட்டமைக்கப்படுகின்றன.
இந்தத் திட்டம் மாணவர்களுக்கு முழுமையான கல்வி அனுபவத்தை உறுதி செய்யும் என்று பள்ளி கல்வி ஆணையர் சீகி தாமஸ் வைத்தியன் தெரிவித்துள்ளார்.
6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் ஒவ்வொரு வாரமும் ஒரு மணிநேரம் என்ற கணக்கில் நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்த மாநிலத்திலுள்ள 26,000 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும், இரண்டு ஆசிரியர்கள் சுகாதார தூதர்களாக (ambassador) தேர்வு செய்யப்படுவார்கள் இந்த சுகாதார தூதர்கள் மாணவர்களிடம் சுகாதார/ஆரோக்கிய கல்வியை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு கொண்டவர்கள் என்று மூத்த அதிகாரி தெரிவித்தள்ளார்.