Helpline number for Rs.1000 to girl students doing higher studies scheme: அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பான விவரங்கள் மற்றும் சந்தேகங்களை அறிந்துக் கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு படிப்பு முடியும் வரையில் மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: மாதம் ரூ1000 உதவித் தொகை; இந்த மாணவிகளுக்கு மட்டுமே: தமிழக அரசு அறிவிப்பு
இது தொடர்பாக திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளை முடித்து, டிப்ளமோ, இளங்கலை படிப்புகள் மற்றும் தொழில்முறை படிப்புகள் உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகளில் முதல் முறையாக நுழையும் மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள்.
இவர்கள் தவிர, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படித்து, பின்னர் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்தவர்களும், இந்தத் திட்டத்தைப் பெறுவதற்கும் தகுதியுடையவர்கள்.
அதேநேரம், 2021-2022 ஆம் கல்வியாண்டில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இதைப் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான விவரங்களை 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த திட்டத்தில் பயன்பெற 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்லூரி படிப்புகளில் நுழைந்த பிறகு https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil