Anna University Nov/Dec 2019 exams Result Declared : அண்ணா பல்கலைக்கழகம் நவம்பர்/டிசம்பர் செமஸ்டர் தேர்வின் முடிவுகளை இன்று காலை (ஜன.29) வெளியிட்டது.
ECE, MECH, IT, EE, Civil, CSE போன்ற இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான ஒற்றைப்படை செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றது.
aucoe.annauniv.edu, coe1.annauniv.edu and coe2.annauniv.edu என்ற அண்ணா பல்கலைக்கழத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், AUCOE என்ற அதிகாரப்பூர்வ மொபைல் செயலி கூகுள் ப்ளேயில் கிடைக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு
மறுகூட்டல், மறுமதீப்பீடு தொடர்பான அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் என்றுய்ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஜனவரி 14 ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதால்,தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவது சற்று தாமதமாகின.
தேர்வு முடிவுகளை எப்படி செக் செய்வது?
ஸ்டேப் 1: மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு செல்ல வேண்டும்.
ஸ்டேப் 2: முகப்புப்பக்கத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ‘யுஜி / பிஜி நவம்பர் / டிசம்பர் தேர்வு முடிவுகள்’ என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் 3: நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்
ஸ்டேப் 4: உங்கள் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டை(கேப்ச்சா) உள்ளிட வேண்டும்.
ஸ்டேப் 5: உங்கள் செமஸ்டர் முடிவு திரையில் தோன்றும்
ஸ்டேப் 6: தேவைப்பட்டால், பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை செமஸ்டர் முறையில் நடத்தப்படுகிறது. ஒற்றைப்படை செமஸ்டர் தேர்வுகள் நவம்பர்/டிசம்பர் மாதங்களிலும், இரட்டைப்படை செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் / மே மாதங்களிலும் நடத்தப்படுகின்றன .
மறுமதிப்பீட்டுத் தேர்வுகளின் முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படுகின்றன.