/tamil-ie/media/media_files/uploads/2019/01/HPCL-Jobs.jpg)
HPCL Recruitment 2019
HPCL Recruitment 2019 : ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிட்டட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு. கேட் தேர்வு எழுத விண்ணப்பித்த மெக்கானிக்கல், கெமிக்க்சல் மற்றும் சிவில் எஞ்சினியரிங் பட்டதாரிகள் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்/
ஆன்லைன் அப்ளிகேசன் தேர்வர்களுக்கு இன்று முதல் இயங்கிவருகிறது. பிப்ரவரி மாதம் 16ம் தேதிக்குள் தங்களின் விண்ணப்ப படிவங்களை தேர்வர்கள் பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள் :
இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
தேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 16, 2019
கேட் தேர்வு நாள்கள் : பிப்ரவரி 2,3,9,10
கேட் தேர்வு முடிவுகள் : மார்ச் 16, 2019
HPCL Recruitment : கல்வித் தகுதி
சிவில், மெக்கானிக்கல், மற்றும் கெமிக்கல் எஞ்சினியரிங் முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
அன்ரிசர்வ்ட் தேர்வர்கள் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பட்டியல் இனத்தோர், பழங்குடியினர் மற்றும் ஓபிசி வகுப்பினர் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கேட் தேர்வு மதிப்பெண்களும் இதில் சேர்த்துக் கொள்ளப்படும்.
மேலும் படிக்க : பிப்ரவரி 13ம் தேதி வெளியாகிறது ஆர்.ஆர்.பி குரூப் டி தேர்வு முடிவுகள்
HPCL Recruitment 2019 : எப்படி விண்ணப்பிப்பது ?
ஹெச்.பி.சி.எல் - நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும். அதில் கேட் ரெஜிஸ்ட்ரேசன் எண்ணுடன் பதிவு செய்யவும்.
விண்ணப்படிவங்களில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை முழுமையாக தரவும்
12 இலக்க அப்ளிகேசன் எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேற்படி நடவடிக்கைகளுக்கு இந்த எண் மிகவும் அவசியம்.
அன்ரிசர்வ்ட் தேர்வர்கள் - டெபிட் கார்ட் மூலம் பணம் செலுத்தினால் 236 கட்டணம் வசூலிக்கப்படும்.
க்ரெடிட் கார்ட் மற்றும் பேங்க் வவுச்சர்கள் மூலம் பதிவு செய்ய 271 ரூபாய் கட்டணமாகும்.
இதர வகுப்பினர் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.