Tamil Nadu 10th, 12th Board Hall Ticket 2020 : நடைபெறவுள்ள மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத, சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட ) தங்களது அட்மிட் கார்டை 19.02.2020 பிற்பகல் முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அட்மிட் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?
- தேர்வர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று “HALL TICKET ” என்ற வாசகத்தினை கிளிக் செய்தல் வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Untitled-design-2-300x200.jpg)
'வேலைவாய்ப்பு வெள்ளி': தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 8ம் வகுப்பு அடிப்படை தகுதி
மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வெழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கு சேர்த்து, ஒரே அட்மிட் கார்டு மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
செய்முறைத் தேர்வுள்ள பாடங்களில் தேர்ச்சி பெறாதோருக்கான குறிப்பு:
ஏற்கனவே தேர்வு எழுதி, எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, செய்முறைத் தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது செய்முறை தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும். அவ்வகைத் தேர்வர்கள் மீண்டும் எழுத்துத் தேர்வினை எழுத வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.