/tamil-ie/media/media_files/uploads/2018/12/news.jpg)
IBPS PO Mains 2018 Score Card
IBPS PO Mains 2018 Score Card : ப்ரோபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட முக்கியத் தேர்வின் முடிவுகளும் ஸ்கோர்கார்டுகளும் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் தங்களின் ஸ்கோர்கார்டினை ஐ.பி.பி.எஸ் இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். இந்த ஸ்கோர்கார்டுகள் டிசம்பர் 27ம் தேதி தொடங்கி, ஜனவரி மாதம் 26, 2019 வரை தேர்வர்களின் பார்வைக்கு இருக்கும்.
IBPS PO Mains 2018 Score Card வெளியீடு
வங்கி பணியாளர் தேர்வு கழகம் ஆகஸ்ட் மாதம் 09ம் தேதி 4252 காலி இடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டது. ஆகஸ்ட் மாதம் 09ம் தேதி வெளியானது. கடந்த அக்டோபர் மாதம் 13 மற்றும் 14 தேதிகளில் இந்த பணியிடங்களுக்கான முதன்மை தேர்வுகள் நடைபெற்று அதன் முடிவுகள் நவம்பர் 2ம் தேதி அறிவிக்கப்பட்டது.
முக்கியத் தேர்வு நவம்பர் 18ம் தேதி நடைபெற்றது. முக்கியத் தேர்வுகளின் முடிவுகள் டிசம்பர் 17ம் தேதி தொடங்கி, டிசம்பர் 24ம் தேதி வரை பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த ஸ்கோர் கார்ட் மூலமாக தேர்வர்கள் தங்களின் தனித்தனி தேர்வுகளை எப்படி எழுதியிருக்கின்றார்கள் என்று மதிப்பாய்வு செய்து கொள்ள வசதியாக இருக்கும்.
மேலும் படிக்க : இந்திய பாதுகாப்பு படையில் வேலை பார்க்க வேண்டுமா ?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.