சென்னையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 57 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதையும் படியுங்கள்: கடலோர காவல் படையில் 300 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!
Project Research Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 40
கல்வித் தகுதி : Graduate in Sociology / Social Work / Social Sciences / Statistics / Biostatistics / Life Sciences படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் OBC – 33, SC – 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 31,000
Project Technician II
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி : ஐ.டி.ஐ (அல்லது) 12 ஆம் வகுப்பு (அல்லது) டிகிரி படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் OBC – 31, SC – 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 17,000
Consultant (Scientific/Technical- Medical/ Non-medical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : MBBS with MD (Community Medicine / PSM) OR DNB (Epidemiology) OR PhD (Epidemiology / Public Health / Operational Research) OR Masters (Epidemiology / Public Health) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,00,000
Project Scientist – B (Non-medical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master’s degree in Statistics/ Biostatistics படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 48,000
Consultant (-Scientific Technical /-Medical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : MBBS with MD (Community Medicine / PSM) or DNB (Epidemiology) or PhD (Epidemiology / Public Health / Operational Research) or Masters (Epidemiology / Public Health) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,00,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://nie.gov.in/images/pdf/careers/NIE_PE_Advt_Sep_2022-26.pdf என்ற இணையதளப்பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.09.20
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://nie.gov.in/images/pdf/careers/NIE_PE_Advt_Sep_2022-26.pdf மற்றும் https://nie.gov.in/images/pdf/careers/NIE_PE_Advt_Sep_2022-24.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil