/tamil-ie/media/media_files/uploads/2022/08/iit-madras-1200.jpg)
IIT Madras, IIS to develop boxing analytics software to increase India’s medal tally at Olympics: கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (Inspire Institute of Sport (IIS)) உடன் இணைந்து இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (ஐ.ஐ.டி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள், 2024 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை அதிகரிக்க, செலவு குறைந்த குத்துச்சண்டை பகுப்பாய்வு தளத்தை உருவாக்கி வருகின்றனர்.
ஐஐடி மெட்ராஸில் உள்ள விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்விற்கான சிறந்த மையத்தால் பல பதிப்பு மென்பொருளாக உருவாக்கப்பட்ட ‘ஸ்மார்ட்பாக்ஸர்’ (Smartboxer) எனப்படும் ஒரு பகுப்பாய்வு தளம், இந்திய விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த போட்டித்தன்மையை வழங்கும். இது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT)-செயல்படுத்தப்பட்ட அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் வீடியோ கேமராக்களைப் பயன்படுத்தி கருத்து மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை வழங்கும்.
இதையும் படியுங்கள்: ஆவடி டி.ஆர்.டி.ஓ நிறுவன வேலைவாய்ப்பு; பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Inspire Institute of Sport (IIS) இல் குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறனை ஆய்வு செய்ய ‘Smartboxer’ பயன்படுத்தப்படும். IIS இன் பின்னூட்டத்தின் அடிப்படையில், 'Smartboxer' பகுப்பாய்வு தளத்தில் மாற்றங்கள் இணைக்கப்படும். பயிற்சியாளர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்களுக்கு உதவ மென்பொருளை திறம்பட பயன்படுத்த இது உதவும். இது விளையாட்டு பிரச்சனைகளை தீர்க்கவும், சிறந்த விளையாட்டு உபகரணங்களை வடிவமைக்கவும் உதவும்.
2024 ஒலிம்பிக்கில் பதக்கங்களை அதிகரிக்கும் லட்சிய இலக்கை அடைய, இந்திய அரசு தனது முயற்சிகளில் கவனம் செலுத்த சில முக்கிய விளையாட்டுகளை பட்டியலிட்டுள்ளது. இதில் வில்வித்தை, குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், பூப்பந்து, மல்யுத்தம், ஹாக்கி, பளு தூக்குதல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் தடகளம் ஆகியவை அடங்கும்.
IIS இலிருந்து சரிபார்த்த பிறகு, IIS உடன் IIT மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் 'Smartboxer' க்கான காப்புரிமைக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.