இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி), சென்னை வங்கி மற்றும் நிதிச் சேவைகளில் கேரியரை உருவாக்க விரும்பும் மாணவர்களுக்கு ஏற்ற ஏழு படிப்புகளுக்கான சேர்க்கையைத் தொடங்கியது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, இந்த படிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://iit.infactpro.com/ இல் பதிவு செய்யலாம்.
இந்த படிப்புகளை ஐ.ஐ.டி மெட்ராஸின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையமான ஐ.ஐ.டி மெட்ராஸ் பிரவர்தக் அறக்கட்டளை, ஐ.ஐ.டி மெட்ராஸின் முன்முயற்சியான டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடமி மற்றும் இன்ஃபாக்ட்ப்ரோவுடன் இணைந்து வழங்குகிறது.
இதையும் படியுங்கள்: TNTET Exam 2022; ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
ஐ.ஐ.டி மெட்ராஸ் வங்கி படிப்புகள்: எப்படி விண்ணப்பிப்பது
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் — https://iit.infactpro.com/
படி 2: முகப்புப் பக்கத்தில், ‘உலாவல் படிப்புகளுக்கான’ (Browse Courses) இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் படிப்பைத் தேர்ந்தெடுத்து, ‘இப்போதே பதிவுசெய்யவும்’ (Apply Now) என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 4: மேல் ஸ்க்ரோலில், ‘விண்ணப்பிக்கவும்’ (Apply) என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
படி 5: தனிப்பட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து, ‘இப்போது பதிவுசெய்க’ என்பதைக் கிளிக் செய்து, தேவையான கட்டணத்தைச் செலுத்தவும்.
கிடைக்கக்கூடிய படிப்புகள்: நிதிச் சந்தைகள் மற்றும் வங்கியியல் அறிமுகம், முதன்மை வங்கியாளர், பத்திர செயல்பாடுகள் மற்றும் இடர் மேலாண்மை, பங்கு வழித்தோன்றல்கள், வங்கி மற்றும் நிதித் திட்டம், டிஜிட்டல் வங்கி, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் முதலீட்டு ஆலோசனை.
இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடரும் அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தவர்களும், BFSI களத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களும் இந்தச் சான்றிதழ் படிப்புகளை படிக்கத் தகுதியுடையவர்கள். இந்த சான்றிதழ் படிப்புகளை எடுக்கும் மாணவர்கள் NISM, NSE, BSE மற்றும் IIBF நடத்தும் பல்வேறு சான்றிதழ் தேர்வுகளை எழுத முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil