Advertisment

NIRF Ranking 2023: இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள்; ஐ.ஐ.டி மெட்ராஸ் தொடர்ந்து 8-ம் ஆண்டாக முதலிடம்

NIRF தரவரிசை 2023: இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியல் இதோ…

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Top-20-Engineering-Colleges-in-India

2022 ஆம் ஆண்டில், முதல் ஐந்து இடங்கள் 2021 ஆம் ஆண்டைப் போலவே உள்ளது. தரவரிசையில் ஐ.ஐ.டி மெட்ராஸ் முதலிடத்தில் உள்ளது. (கிராபிக்ஸ் - அபிஷேக் மித்ரா)

NIRF தரவரிசை 2023 பொறியியல் கல்லூரி: முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த முறையும், பொறியியல் பிரிவில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) தரவரிசை 2023 இன் முதல் 10 பட்டியலில் ஐ.ஐ.டி.,க்கள் (IIT) ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT-Madras) மெட்ராஸ் சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. NIRF தரவரிசையின் எட்டாவது பதிப்பு இன்று டெல்லியில் கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.

Advertisment

இரண்டாவது இடத்தை ஐ.ஐ.டி-டெல்லி, அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி-பாம்பே, ஐ.ஐ.டி-கான்பூர் மற்றும் ஐ.ஐ.டி-ரூர்க்கி ஆகியவை பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்: NIRF Ranking 2023: இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல்; ஐ.ஐ.டி மெட்ராஸ் 5-ம் ஆண்டாக முதலிடம்

ஐ.ஐ.டி-மெட்ராஸ் ஒட்டுமொத்த பிரிவின் கீழ் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

publive-image

2022 இல், முதல் ஐந்து இடங்கள் 2021 தரவரிசையைப் போலவே இருந்தன. ஐ.ஐ.டி மெட்ராஸ் முதலிடத்தில் உள்ள நிலையில், ஐ.ஐ.டி டெல்லி மற்றும் ஐ.ஐ.டி பாம்பே முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தன. ஐ.ஐ.டி கான்பூர் மற்றும் ஐ.ஐ.டி காரக்பூரும் தங்கள் முந்தைய ஆண்டுகளின் தரவரிசையில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும், ஐ.ஐ.டி ரூர்க்கி ஆறாவது இடத்தையும், ஐ.ஐ.டி குவஹாத்தி ஏழாவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டன.

இருப்பினும், ஐ.ஐ.டி ஹைதராபாத்தின் இரண்டு வருட தக்கவைப்பை முறியடித்து, கடந்த ஆண்டு திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் எட்டாவது இடத்தைப் பிடித்தது. ஐ.ஐ.டி ஹைதராபாத் ஒன்பதாவது இடத்திற்கு சரிந்தது, மேலும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் கர்நாடகா 2021 தரவரிசையைப் போலவே பத்தாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், வேலூர் தொழில்நுட்பக் கழகம், ஐ.ஐ.டி பி.எச்.யு, ஐ.ஐ.டி தன்பாத், என்.ஐ.டி ரூர்கேலா, ஐ.ஐ.டி இந்தூர், அண்ணா பல்கலைக்கழகம், கெமிக்கல் டெக்னாலஜி நிறுவனம், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் மற்றும் ஐ.ஐ.டி மண்டி ஆகியவை முறையே கடந்த ஆண்டு 11 முதல் 20வது ரேங்க்களில் இடம்பெற்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Iit Madras
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment