scorecardresearch

கல்லூரி மாணவர்களுக்கு தொழில் திறன் சான்றிதழ் படிப்பு; ஐ.ஐ.டி சென்னை அறிமுகம்

ஐ.ஐ.டி சென்னையின் தொழில் திறன் படிப்புகள் மூன்று ஆண்டுகளுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன, இது ஒரு மாணவரின் பட்டப்படிப்பு திட்டத்தின் கால அளவுடன் ஒத்து இருக்கும்

students
கல்லூரி மாணவர்கள் (பிரதிநிதித்துவ படம்)

ஐ.ஐ.டி மெட்ராஸ் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையானது AI-சார்ந்த திறன் தளமான GRADSKEY உடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு ‘தொழிற்சாலைகளுக்கு ஏற்ற திறன்கள்’ குறித்து பயிற்சி அளிக்கிறது.

இந்த தொழில் திறன் திட்டங்கள் மூன்று ஆண்டுகளுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன, இது ஒரு மாணவரின் பட்டப்படிப்பு திட்டத்தின் கால அளவுடன் ஒத்து இருக்கும். இருப்பினும், படிப்புகள் மாணவர்களின் கற்றல் வேகத்திற்கு ஏற்ப படிப்படியான திறன்களை உருவாக்க குறுகிய, வருடாந்திர சான்றிதழ் திட்டமாகவும் பிரித்து வழங்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: ஐ.ஐ.டி சென்னையில் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பு அறிமுகம்; 12-ம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதும்!

ஒவ்வொரு ஆண்டும், முதல் ஆண்டில் இருந்து, மாணவர்கள் படிப்படியாக தொழில்துறைக்குத் தேவையான திறன்களைப் பெறுகிறார்கள். மாணவர்கள் அடித்தளச் சான்றிதழுடன் தொழில் திறன்களைப் பெறத் தொடங்குவார்கள் மற்றும் மூன்று ஆண்டுகளின் முடிவில், தகுதியான மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்யும் கல்வி நிறுவனங்களில் தனிப்பட்ட முறையில் படிப்புகள் வழங்கப்படும். மற்ற நிறுவனங்களில், இது ஒரு கலப்பின முறையில் வழங்கப்படும், சுமார் 60-75 சதவீதம் ஆன்லைனில் இருக்கும், மீதமுள்ள வகுப்புகள் நேரடி முறையில் இருக்கும். பாடநெறிக்கான கட்டணம் ஒரு செமஸ்டருக்கு ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Iit madras pravartak technologies foundation industry skill certification programme