பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு – ஐஐடிகள் முக்கிய முடிவு

தற்போது நடைமுறையில் இருக்கும் 20 சதவீத பெண்கள் ‘இடஒதுக்கீட்டிற்கு’பதிலாக, ஐ.ஐ.டி.கள் தற்போது “20% பெண்களுக்கான பிரத்தியோக இடங்கள்” (supernumerary) மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளன.

By: Updated: March 10, 2020, 05:48:55 PM

இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐஐடி) படிக்க விரும்பும் மாணவிகளுக்கு ஒரு நல்ல செய்தி……

தற்போது நடைமுறையில் இருக்கும் 20 சதவீத பெண்கள் ‘இடஒதுக்கீட்டிற்கு’பதிலாக, ஐ.ஐ.டி.கள் தற்போது “20% பெண்களுக்கான பிரத்தியோக இடங்கள்” (supernumerary) மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளன.  இடஒதுக்கீடு பாதிக்காத வகையில் ஒவ்வொரு ஐஐடி நிறுவனங்களும் தங்களது அட்மிஷன் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று பொருள் கொள்ள முடிகிறது. மாணவிகளுக்கான ‘தனிதகுதி பட்டியல்’ உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பி.இ vs பி.டெக் : தேர்வுக்கு பின் எதை தேர்வு செய்யலாம்

ஐ.ஐ.டி மண்டி-ன் இயக்குநர் திமோதி ஏ கோன்சால்வ்ஸ் தலைமையிலான குழு, ‘ஐஐடி கல்வி கழகத்தில் மாணவிகளின் எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிப்பது’ என்ற கேள்விக்கு பெண்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்து. இதன் மூலம் 2018 ல் 14 சதவீதமாகவும், கடந்த ஆண்டு 17 சதவீதமாகவும் இடஒதுக்கீடு இருந்தது.

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு: சிலபஸ், தயாராகும் முறை முழு விவரம்

மேலும், ஐ.ஐ.டி.கள் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களுக்காக 10 சதவீத இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வெளிநாடு மாணவர்கள்  ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் ‘தகுதிபெற’ வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. இந்திய மாணவர்கள் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் தரவரிசை பட்டியலில் முதல் 2.5 லட்சம் இடத்தில் வந்தர்களுக்கு மட்டும்  ஐஐடிகளில் அனுமதிக்கப்படுகின்றன. என்ன இருந்தாலும், ஐ.ஐ.டி.களில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 2018 ஆம் ஆண்டில், 51 வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு பதிவு செய்தனர், அதில் 36 மாணவர்கள் தேர்வெழுதினர்.


இவர்களைத் தவிர, எந்தவொரு படிப்பிலும், பட்டியல் சாதியினருக்கு 15 சதவீதமும், பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) தேர்வர்களுக்கு 7.5 சதவீதமும் இட ஒதுக்கீடு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு, ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு மே மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. ஐ.ஐ.டி டெல்லி இந்த தேர்வை நடத்தவுள்ளது. கடந்த ஆண்டு மும்பையின் கார்த்திகே குப்தா அட்வான்ஸ் தேர்வில் அகில இந்திய தரவரிசை (AIR) பட்டியலில்  முதலிடம் பெற்றார்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Iits will now make seats supernumerary in nature for women students

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X