scorecardresearch

இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் அப்ளை பண்ணுங்க!

இந்தியன் வங்கியின் சென்னை தலைமை அலுவலகத்தில் சிறப்பு அதிகாரிகாரி பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் அப்ளை பண்ணுங்க!

இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் சென்னை கார்ப்பரேட் அலுவலகத்தில் கீழ்கண்ட சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2022 ஆகும்.

இதையும் படியுங்கள்: TNUSRB SI: தமிழக காவல்துறை எஸ்.ஐ வேலை; தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?

Social Media Specialist

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : Bachelor’s degree or equivalent in Media, Marketing, Communications, IT, Technology, Management fields படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

Partnerships and Affiliates lead

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : Bachelor’s degree or equivalent in Management, Marketing, IT, Media, technology fields படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

Creative expert

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : Bachelor’s degree or equivalent in Management, Marketing, IT, Media, technology fields படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

Data engineers

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : Bachelor’s degree in Computer/System Science, Mathematics, Econometrics, Statistics, Data Analytics படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

UI / UX designers

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : Bachelor or equivalent degree in design related discipline, fine arts, Consumer behavior, Marketing, mass media, technology படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 01.08.2022 அன்று 30 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.indianbank.in/wp-content/uploads/2022/11/Application-format-1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Pin – 600 014, Tamil Nadu

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.12.2022

விண்ணப்பக்க கட்டணம்: ரூ. 1000

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.indianbank.in/wp-content/uploads/2022/11/Detailed-Advertisement-for-Engagement-of-Specialists-in-Digital-Marketing-Analytics-CoE-and-DIGITIZATION-on-Contractual-basis.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Indian bank recruitment 2022 for specialist officers post apply soon