இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் அறிவியலாளர்/ பொறியியலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 303 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2023
இதையும் படியுங்கள்: BHEL Jobs; பெல் நிறுவன வேலை வாய்ப்பு; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
Scientist/ Engineer ‘SC’ (Electronics)
காலியிடங்களின் எண்ணிக்கை: 92
கல்வித் தகுதி : BE/ B.Tech in Electronics & Communication Engineering படித்திருக்க வேண்டும்.
Scientist/ Engineer ‘SC’ (Mechanical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 163
கல்வித் தகுதி : BE/ B.Tech in Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
Scientist/ Engineer ‘SC’ (Computer Science)
காலியிடங்களின் எண்ணிக்கை: 48
கல்வித் தகுதி : BE/ B.Tech in Computer Science Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 56,100
வயதுத் தகுதி: 14.06.2023 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.isro.gov.in/ICRB_Recruitment7.html என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.06.2023
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 250
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2023_May/Advt_EMC_2023WebsiteBilingual_V1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil