இளம் விஞ்ஞானி திட்டம் : வருங்கால அப்துல் கலாம்களை அழைக்கும் இஸ்ரோ

இஸ்ரோ இளம் விஞ்ஞானி திட்டம் யுவிகா : இதன் மூலம் இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனத்தில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை மாணவர்கள் பெறுகிறார்கள்.

By: January 28, 2020, 3:02:50 PM

ISRO Young Scientist Programme 2020:  யுவிகா இளம் விஞ்ஞானி திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கான அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது .

யுவிகா திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பெங்களூருவில் உள்ள யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம், அகமதாபாதில் உள்ள விண்வெளி செயலாக்க மையம், ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு விண்வெளி செயலாக்க மையம் ஆகிய நான்கு மையங்களில் இரண்டு வார காலத்திற்கு உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

யுவிகா  திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறை வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 24 ஆம் தேதி வரை செயல்படும். கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வு அளவுகோல்களில் சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்படும்.

தற்காலிகமாக தேர்ந்ட்தேடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியல் வரும் மார்ச் மாதம் இரண்டாம் தேதி அன்று அறிவிக்கப்படும். தற்காலிகமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தங்கள்  சான்றிதழ்களின் நகல்களை மார்ச் 23 அல்லது அதற்கு முன்னர் பதிவேற்றுமாறு கோரப்படுவார்கள்.


தொடர்புடைய சான்றிதழ்களை சரிபார்த்த பிறகு இறுதி தேர்வு பட்டியல் மார்ச் 30 அன்று வெளியிடப்படும், ” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரைமுடியை சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கும் மன அழுத்தம் – ஆய்வு

8 ஆம் வகுப்பு முடித்து தற்போது 9 ஆம் வகுப்பில் படிப்பவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள். கல்வி செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் செய்யப்படுவார்கள்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து ஜே.கே. ஆதித்யா, ஆர். நித்யாராஜ், பி.சமீரா ஆகியோரும், புதுச்சேரியிலிருந்து எம்.பவித்ரா, கே.கவிபாரதி, ஜி.மோனிகா ஆகியோரும் யுவிகா இளம் விஞ்ஞானி திட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிபிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Isro young scientist programme

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X