மிகவும் பிரபலமான கோடைகால ஃபெல்லோஷிப் திட்டம் 2020 குறித்த அறிவிப்பை ஐ.ஐ.டி மெட்ராஸ் வெளியிட்டுள்ளது. இந்த ஃபெல்லோஷிப் இரண்டு மாத காலத்திற்கு நடைபெறும் என்றும் பங்கேற்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.6,000 உதவிதொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?
ஃபெல்லோஷிப் காலம் - 20 மே மாதம் முதல் 19 ஜூலை மாதம் வரை
பொறியியல், மேலாண்மை, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் படிக்கும் மாணவர்களிடையே உயர்தர ஆராய்ச்சியில் விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் மேம்படுத்துவதற்காக இந்த ஃபெல்லோஷிப் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தகுதி வரம்பு: கல்வித்தகுதி: மாணவர்கள் இளங்கலை பொறியியல் / தொழில்நுட்ப இளங்கலை /அறிவியல் இளங்கலை படிப்பு (அ) முதுகலை பொறியியல் / மாஸ்டர் ஆஃப் டெக்னாலஜி (எம்.டெக்) போன்றவைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐ.ஐ.டி மெட்ராஸின் பின்வரும் துறைகளில் இந்த ஃபெல்லோஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
பொறியியல் பிரிவு :
வான்வெளிப் பொறியியல், பயன்பாட்டு மெக்கானிக்ஸ், உயிர் தொழில்நுட்பம், வேதியியல் பொறியியல், சிவில் பொறியியல், கணினி பொறியியல், பொறியியல் வடிவமைப்பு, மின் பொறியியல், இயந்திரப் பொறியியல், உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல், பெருங்கடல் பொறியியல்.