Advertisment

ஜே.இ.இ விண்ணப்பம்; உடனடியாக இந்த திருத்தத்தைச் செய்யுங்கள்

ஜே.இ.இ விண்ணப்பத்தில் குறிப்பிட்ட வருமானம் உடைய BC, BCM, MBC பிரிவில் உள்ளவர்கள் ஓ.பி.சி (OBC - NCL) என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் சிலர் பொதுப் பிரிவை தேர்வு செய்துள்ளனர். எனவே OBC – NCL பிரிவுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்

author-image
WebDesk
New Update
JEE-Main-2023

ஜே.இ.இ முதன்மை தேர்வு (பிரதிநிதித்துவ படம்)

ஜே.இ.இ விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் செய்த தவறுகளை சரி செய்வதற்கான வாய்ப்பை தேசிய தேர்வு முகமை வழங்கியுள்ளது. இன்று (மார்ச் 14) 9 மணி வரை திருத்தம் செய்துக் கொள்ளலாம்.

Advertisment

இந்தநிலையில் ஜே.இ.இ விண்ணப்பதாரர்கள் செய்ய வேண்டிய முக்கிய திருத்தம் குறித்து கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: உக்ரைனில் மருத்துவ படிப்பு; தகுதி, கல்விக் கட்டணம், கல்லூரிகள் உள்ளிட்ட முழு தகவல்கள் இங்கே

அதில், சில விண்ணப்பதாரர்கள் சாதிப் பிரிவை தவறாக தேர்வு செய்துள்ளனர். குறிப்பிட்ட வருமானம் உடைய பி.சி (BC), பி.சி (முஸ்லீம்) (BCM), எம்.பி.சி (MBC) பிரிவில் உள்ளவர்கள் ஓ.பி.சி (OBC - NCL) என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் சிலர் பொதுப் பிரிவை தேர்வு செய்துள்ளனர். ஆண்டு வருமானம் குறித்த தவறான புரிதல்கள் பலரிடம் உள்ளது. ஊதிய மற்றும் வேளாண்மை வருமானம் OBC - NCL சான்றிதழுக்கு எடுத்துக் கொள்ளப்படாது. இதர வகைகளில் உள்ள வருமானம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே பொதுப் பிரிவில் விண்ணப்பித்து, மேற்கூறிய வருமான வரம்பிற்குள் உள்ளவர்கள் உடனடியாக OBC - NCL என மாற்றிக் கொள்ளுங்கள். ஜே.இ.இ முதல் அமர்வில் நீங்கள் பொதுப் பிரிவை தேர்வு செய்திருந்தாலும், தற்போதைய அமர்வுக்கு நீங்கள் ஓ.பி.சி பிரிவை தேர்வு செய்யலாம்.

ஒருவேளை உங்களுக்கு OBC – NCL பிரிவுக்குள் வருகிறோமா என்று தெரியவில்லை என்றாலும், இந்த பிரிவை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களால் OBC – NCL சான்றிதழை கவுன்சலிங் போது வழங்க முடியாவிட்டால், நீங்கள் பொதுப் பிரிவினராக கருதப்படுவீர்கள். எனவே, OBC – NCL பிரிவுக்கு வாய்ப்புள்ளவர்கள் உடனடியாக, உங்கள் பொதுப் பிரிவிலிருந்து மாற்றிக் கொள்ளுங்கள். விண்ணப்பம் நிராகரிக்கப்படாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jee Main
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment