Advertisment

JEE அட்வான்ஸ்டு 2023; ஐ.ஐ.டி.,களில் சேர 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம்; ஏன்?

JEE அட்வான்ஸ்டு 2023 தகுதி அளவுகோல்: IIT கள் 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை மீண்டும் கொண்டு வருவதால், சமீபத்திய முடிவு மதிப்புள்ளதா? நிபுணர்கள் சொல்வது என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
JEE-Main-2023

ஜே.இ.இ முதன்மை தேர்வு (பிரதிநிதித்துவ படம்)

என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி மற்றும் சி.எஃப்.டி.ஐ.,க்களில் சேர்க்கைப் பெற 12-ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியை இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டி) மீண்டும் கொண்டு வந்துள்ளன, இந்த முடிவை ஜே.இ.இ 2023 தேர்வாளர்கள் எதிர்க்கின்றனர், குறிப்பாக கடந்த ஆண்டு வாய்ப்பை தவறவிட்டு, ஒரு வருடமாக தேர்வு எழுத காத்திருப்பவர்கள்.

Advertisment

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜே.இ.இ அட்வான்ஸ்டு சிற்றேட்டின்படி, விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் மொத்த மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 75 சதவிகிதம் மற்றும் SC, ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது அந்தந்த வாரியங்களின் வெற்றிகரமான வேட்பாளர்களின் வகை வாரியான முதல் 20 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: NEET UG Expected Cut Off 2023: தமிழகத்தின் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட் ஆஃப் எவ்வளவு இருக்கும்?

JEE அட்வான்ஸ்டு 2023, ஐ.ஐ.டி கவுகாத்தியின் அமைப்புத் தலைவர் பிஷ்ணுபாதா மண்டல், ஆவணச் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது 75 சதவீத தகுதிகள் நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ளார். "ஆவண சரிபார்ப்பின் போது அவர்கள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கான ஆதாரத்தைக் காட்டும்படி கேட்கப்படுவார்கள். அதேநேரம் மற்றும் அளவுகோலாக, மாணவர்கள் தங்கள் குழுவில் முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெற்றால், அவர்களும் தகுதி பெறுவார்கள், ”என்று பிஷ்ணுபாதா மண்டல் indianexpress.com இடம் கூறினார்.

"இந்த அளவுகோல் கொரோனா காலகட்டத்திற்கு மட்டுமே தளர்வு அளிக்கப்பட்டது, மேலும் இந்திய வாரிய தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இந்தத் தகுதி அளவுகோல் இப்போது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது," என்று பிஷ்ணுபாதா மண்டல் கூறினார்.

தகுதிக்கான அளவுகோல்களை ஏன் 50 சதவீதமாகக் குறைக்க முடியாது என்று கேட்டபோது, ​​அதற்குக் காரணம் “ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.,களுக்கான (சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள்) உயர்நிலைத் தேர்வுகளாகக் கருதப்படுவது, மற்றும் எங்களின் மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள்” என்றும் மண்டல் கூறினார். 75 சதவீத அளவுகோல் ‘டம்மி ஸ்கூல்’ கலாச்சாரம் குறைவதையும் உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார். "மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல கருத்துகள் உள்ளன, மேலும் அந்த அடிப்படைக் கருத்துக்களைப் புரிந்துகொள்ள அவர்கள் பள்ளிக்குச் செல்வது முக்கியம். இது போலி பள்ளி கலாச்சாரத்தை குறைக்க உதவும், ஏனெனில் மாணவர்கள் இப்போது 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதில் அதிக கவனம் செலுத்துவார்கள், ”என்று அவர் கூறினார்.

ஐ.ஐ.டி டெல்லியின் முன்னாள் இயக்குனர் வி ராம்கோபால் ராவ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை சேர்ப்பதற்கு ஆதரவாக பேசினார், இது மாணவர்களின் நடைமுறை மற்றும் சமூக திறன்களை வளர்க்க உதவுகிறது என்று கூறினார். "பள்ளிக்குச் செல்வது என்பது செய்முறை வகுப்புகள் மற்றும் பரீட்சைகளுக்கு சமமாக முக்கியத்துவம் வாய்ந்தது. 12 ஆம் வகுப்பு அறிவு செய்முறை மற்றும் அகநிலை இயல்புடையது, அதேசமயம் JEE என்பது புறநிலை. இந்த அளவுகோல் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை சோதிக்க உதவும்,” என்று ராவ் கூறினார்.

ஐ.ஐ.டி.,கள் "முதல் 1 சதவீத மாணவர்களை ஒப்புக்கொள்கின்றன, எனவே, இந்த 1 சதவீதத்திற்கான தேவைகள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.

சில JEE கோச்சிங் இன்ஸ்டிட்யூட் ஆசிரியர்களும், தகுதி அளவுகோல் "மோசமான நிலை அல்ல" என்றும், 'உயர்தர' மாணவர்களை வடிகட்ட இது தேவை என்றும் நம்புகின்றனர்.

கோட்டாவின் அனாகாடமியில் இருக்கும் பிரசாந்த் ஜெயின், 75 சதவீத அளவுகோல் பொருத்தமானது, குறைக்கப்படக்கூடாது என்று நம்புகிறார். "நம்மிடம் ஐ.ஐ.டி.,கள், பின்னர் என்.ஐ.டி.,கள், பின்னர் ஐ.ஐ.ஐ.டி.,கள் (இந்த அளவுகோல் அர்த்தமுள்ளதாக இருக்கும்) என இந்தியாவில் பொறியியல் கல்லூரிகளின் படிநிலை உள்ளது" என்று ஜெயின் கூறினார்.

தேர்வு செயல்முறை ஆஃப்லைனில் இருந்தபோது, ​​​​ஐ.ஐ.டி.,கள் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விரும்பின. “அந்த நேரத்தில், ஐ.ஐ.டி.,யில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் சுமார் 70-75 சதவீதம் என்று சேர்க்கை ஆணையம் உணர்ந்து கொண்டது, இது அப்போதைய 60 சதவீதத்தை விட அதிகமாகும். எனவே, தகுதியை இப்போது 75 சதவீதமாக நிர்ணயிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ”என்று அவர் indianexpress.com இடம் கூறினார், மேலும் தேசிய தேர்வு முகமை (NTA) இது தொடர்பாக மாணவர்களுக்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், மாணவர்களின் அறிவுத்திறனை மதிப்பிடுவதற்கு 75 சதவீத அளவுகோல் தேவையில்லை என்று மோஷன் எஜுகேஷன் நிறுவனர்-சி.இ.ஓ நிதின் விஜய் கூறினார். “அதிகாரிகள் மாநில வாரிய மாணவர்களையோ அல்லது அரசுப் பள்ளி மாணவர்களையோ CBSE மற்றும் CISCE போன்ற மத்திய வாரியங்களின் தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுடன் ஒப்பிடுவதால், இது ஒரு நியாயமற்ற மதிப்பீடாகும். மேல் 20 சதவிகிதம் என்ற அளவுகோலும் இருக்கிறது என்று நியாயப்படுத்துகிறார்கள். இருப்பினும், இது இன்னும் சீரற்ற அடிப்படையில் உள்ளது. சில மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அவர் போட்டித் தேர்விலும் சிறப்பாக செயல்பட மாட்டார் என்று அர்த்தமல்ல,” என்று அவர் வாதிட்டார்.

மேலும், “வாரியத் தேர்வுகள் முக்கியமாக அகநிலை சார்ந்தவை, இதில் மாணவர்கள் கருத்துக்களைக் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் JEE போன்ற போட்டித் தேர்வுகளில் நாங்கள் ஒரு மாணவரின் IQ ஐ சரிபார்க்கிறோம், இது முற்றிலும் வேறுபட்ட அம்சமாகும். இது தேவையில்லை மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது” என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit Jee Main
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment