JEE முதன்மை தேர்வு 2023: தேசிய தேர்வு முகமை (NTA) புதன்கிழமை (ஜனவரி 18) கூட்டு நுழைவுத் தேர்வுக்கான (JEE) முதன்மை அமர்வு 1 தேர்வு 2023க்கான தேர்வு நகர அறிவிப்புச் சீட்டை வெளியிட்டது. தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்புச் சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: JEE Mains 2023: தமிழ்நாட்டில் உள்ள டாப் கல்லூரிகள் இவைதான்!
அறிவிப்பின்படி, B.E./B.Tech க்கு (தாள் 1, ஷிப்ட் 1வது மற்றும் ஷிப்ட் 2வது) ஜனவரி 24, 25, 29, 30, 31, மற்றும் பிப்ரவரி 1, 2023 ஆகிய தேதிகளில் JEE (முதன்மை) 2023 அமர்வை NTA நடத்தும். B. Arch மற்றும் B.Planning க்கு (தாள் 2A மற்றும் 2B), ஜனவரி 28 அன்று தேர்வு நடைபெறும் (இரண்டாவது ஷிப்ட் மட்டும்). முன்னதாக, ஜே.இ.இ மெயின் தேர்வு ஜனவரி 27-ம் தேதி நடத்தப்படும் என்று கூறப்பட்டது.
நாடு முழுவதும் 290 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 25 நகரங்களிலும் உள்ள வெவ்வேறு மையங்களிலும் அமர்வு 1 தேர்வு நடத்தப்படும்.
ஜே.இ.இ (முதன்மை) 2022 அமர்வு 1 தேர்வு நகர அறிவிப்பு சீட்டு: பதிவிறக்கம் செய்வது எப்படி?
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் - https://jeemain.nta.nic.in/
படி 2: முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் சீட்டு இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள், தேவையான சான்றுகளை உள்ளிடவும்.
படி 4: சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil