scorecardresearch

JEE முதன்மை தேர்வு 2023 ரிசல்ட் வெளியீடு; ஸ்கோர் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?

JEE முதன்மை 2023, அமர்வு 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; 20 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்று அசத்தல்

JEE-Main-2023
ஜே.இ.இ முதன்மை தேர்வு (பிரதிநிதித்துவ படம்)

JEE முதன்மை 2023, அமர்வு 1 தேர்வு முடிவு: தேசிய தேர்வு முகமை (NTA) இன்று கூட்டு நுழைவுத் தேர்வு முதன்மை (JEE முதன்மை) 2023, அமர்வு 1 க்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவைப் பார்க்கலாம்.

JEE Main 2023 இறுதி தற்காலிக விடைக்குறிப்பு பிப்ரவரி 6 அன்று வெளியிடப்பட்டது. முன்னதாக, தற்காலிக விடைக்குறிப்பு பிப்ரவரி 2 அன்று வெளியிடப்பட்டது, மேலும் மாணவர்கள் விடைக்கான சவால்களை எழுப்ப பிப்ரவரி 4 வரை அவகாசம் இருந்தது.

இதையும் படியுங்கள்: ஐ.ஐ.டி சென்னை பி.எஸ் படிப்பு; 100% உதவித்தொகை வழங்கும் கார்கில் நிறுவனம்

ஜனவரி 24, 25, 28, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஜனவரி 28 அன்று நடைபெற்ற தேர்வு பி.ஆர்க் மற்றும் பி.பிளானிங், மீதமுள்ள நாட்களில் பி.இ மற்றும் பி.டெக் படிப்புக்கான தேர்வு நடந்தது. இந்த ஆண்டு, மொத்தம் 8.60 லட்சம் மாணவர்கள் அமர்வு 1 தேர்வுக்கு பதிவுசெய்தனர் மற்றும் 8.23 ​​லட்சம் (95.80%) விண்ணப்பதாரர்கள் நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர்.

அமர்வு 1 இல், மொத்தம் 20 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர், அவர்களில் 14 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், நான்கு பேர் OBC-NCL, மற்றும் gen-EWS மற்றும் SC பிரிவில் இருந்து தலா ஒருவர். 99.99 சதவீத மதிப்பெண் பெற்ற இரு பெண்கள் உள்ளனர்.

JEE Main 2023 இன் அமர்வு ஒன்று 95.8 சதவீதத்துடன் இதுவரை இல்லாத அதிகபட்ச வருகையைப் பதிவு செய்தது. இந்த ஆண்டு, ஜே.இ.இ இரண்டு அமர்வுகளாக நடத்தப்படுகிறது. இரண்டாவது அமர்வு ஏப்ரல் 6, 8, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும். தேர்வுக்கான ஒதுக்கப்பட்ட தேதிகள் ஏப்ரல் 13 மற்றும் 15. அமர்வு இரண்டிற்கான பதிவு இன்று தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி முடிவடையும்.

JEE முதன்மை 2023, அமர்வு 1: மதிப்பெண் அட்டையை எவ்வாறு பதிவிறக்குவது?

படி 1: JEE அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும் — https://jeemain.nta.nic.in/

படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள முடிவு இணைப்பைக் கிளிக் செய்யவும்

படி 3: விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின் போன்ற உங்கள் சான்றுகளை உள்ளிடவும்

படி 4: எதிர்கால குறிப்புக்காக முடிவைப் பார்த்து பதிவிறக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Jee mains 2023 session 1 results and scorecard download

Best of Express