JoSAA கவுன்சிலிங் 2023: கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (JoSAA) இன்று கவுன்சிலிங் தேதிகளை அதிகாரப்பூர்வ இணையதளமான https://josaa.nic.in/ இல் வெளியிட்டது. கவுன்சிலிங் மற்றும் தேர்வு நிரப்புதல் (Choice Filling) செயல்முறை ஜூன் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும்.
Advertisment
JoSAA கவுன்சிலிங் 2023க்கான ரவுண்ட் 1க்கான இட ஒதுக்கீடு முடிவை ஜூன் 30 அன்று அதிகாரிகள் வெளியிடுவார்கள். அதேநேரம், சுற்று 2 இட ஒதுக்கீடு முடிவு ஜூலை 6 அன்று வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஜூலை 6 முதல் 10 வரை JoSAA கவுன்சிலிங் பதிவை முடிக்கலாம்.
படி 2: JoSAA பதிவை முடிக்க நேரடி இணைப்பை கிளிக் செய்யவும்.
படி 3: தேவையான புலங்களில் அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்.
படி 4: JoSAA 2022 சாய்ஸ் ஃபில்லிங் செயல்முறையை முடிக்கவும்.
படி 5: JoSAA பதிவு படிவத்தில் நிரப்பப்பட்ட அனைத்து தேர்வுகளையும் மதிப்பாய்வு செய்து உறுதி செய்யவும்.
JoSAA 2023 பங்கேற்கும் நிறுவனங்கள்
JoSAA கவுன்சிலிங் 2023ல் 114 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த நிறுவனங்களில் IITகள், NITகள், IITகள் GFTIகள் மற்றும் பிற பொறியியல் கல்லூரிகள் அடங்கும். கவுன்சிலிங் செயல்பாட்டில் இடங்கள் ஒதுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சேர்க்கையை உறுதிப்படுத்த சேர்க்கைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
பங்கேற்கும் கல்வி நிறுவனங்கள்
கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை
ஐ.ஐ.டி
23
என்.ஐ.டி
31
ஐ.ஐ.ஐ.டி
26
பிற அரசு உதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (பிற-GFTIகள்)
29
ஐ.ஐ.ஈ.எஸ்.டி ஷிப்பூர்
1
இந்த முறை, 180,226 விண்ணப்பதாரர்கள் இரு தாள்களையும் எழுதியுள்ளதால், 95 சதவீதம் வருகை பதிவாகியுள்ளதாக தேர்வை நடத்தும் ஐ.ஐ.டி கவுகாத்தி தெரிவித்துள்ளது. கூடுதலாக, ஐ.ஐ.டி கான்பூர் மண்டலத்தில், 12 நகரங்களில் 77 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 23,677 பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களில், மொத்தம் 22,955 மாணவர்கள் இரு தாள்களையும் எழுதினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil