Advertisment

TNEA Counselling: உங்க ரேண்டம் எண் செக் செய்வது எப்படி? 20-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் ரேண்டம் எண் வெளியீடு; கலந்தாய்வு எப்போது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Engineering

பொறியியல் கல்லூரி மாணவர்கள்

தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் ரேண்டம் எண்ணை இணையதளப் பக்கம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த கலந்தாய்வை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கியது.

இதையும் படியுங்கள்: NIRF Ranking 2023: இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள்; ஐ.ஐ.டி மெட்ராஸ் தொடர்ந்து 8-ம் ஆண்டாக முதலிடம்

விண்ணப்பப்பதிவு ஜூன் 4 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 2,29,167 மாணவர்கள் என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இதில் 1,87,693 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர்.

இந்த மாணவர்களுக்கான தரவரிசை முடிவு செய்யும் வகையில் ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. ஒரே மாதிரியாக கட் ஆஃப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது ரேண்டம் எண் மூலம் முடிவு செய்யப்படும். ரேண்டம் எண்ணில் பெரிய எண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இதற்கிடையே பொறியியல் படிக்க விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் இணைய வழியில் வருகிற 20 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைன் வழியாக ஜூலை மாதம் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது. சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 2 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும். அதன்பின்னர், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை நடைபெறும்.

மாணவர்கள் ரேண்டம் எண் மற்றும் கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/ என்ற இணைய தளப் பக்கம் மூலம் அறிந்து கொள்ளலாம். ரேண்டம் எண்ணை தெரிந்துக் கொள்ள முதலில் https://www.tneaonline.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உங்கள் பயனர் ஐ.டி மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழைய வேண்டும். அதில் உங்கள் தனிப்பட்ட விவரங்களுடன் ரேண்டம் எண் இடம் பெற்றிருக்கும். எதிர்காலத் தேவைக்காக பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment