Karur TNSRLM invites application for Manager and Coordinator posts: கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
வட்டார இயக்க மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30.09.2021 அன்று 35 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம் : ரூ.15,000
வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 15
கல்வித் தகுதி : 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 30.09.2021 அன்று 35 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சம்பளம் : ரூ.12,000
இதையும் படியுங்கள்: சென்னை ஐஐடி வேலை; டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு!
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் கீழ்கண்ட முகவரியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அதே முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி : திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், கரூர்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.04.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2022/03/2022033071.pdf என்ற இணையதள பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.