Advertisment

LIC HFL Jobs; டிகிரி தகுதிக்கு அசிஸ்டெண்ட் மேனேஜர் வேலை; உடனே அப்ளை பண்ணுங்க!

எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
IISc Jobs: இந்திய அறிவியல் நிறுவன வேலை வாய்ப்பு; 76 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

LIC HFL recruitment 2022 for Assistant Manager jobs apply soon: இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் துணை நிறுவனமான வீட்டு கடன் (LIC Housing Finance Limited) நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் மற்றும் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 80 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 80

அசிஸ்டெண்ட் (Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை: 50

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.01.2022 அன்று 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 33,960

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு மீன்வள பல்கலை. வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அசிஸ்டெண்ட் மேனேஜர் (Assistant Manager)

காலியிடங்களின் எண்ணிக்கை: 30

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.01.2022 அன்று 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 80,110

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 800

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழி எழுத்துத் தேர்வு:

இந்த தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதம் (Numerical ability) பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial/Banking Awareness) ஆகிய பிரிவுகளில் தலா 50 வினாக்கள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.

நேர்முகத் தேர்வு

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.lichousing.com/careers அல்லது https://ibpsonline.ibps.in/licaamjul22/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 25.08.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.lichousing.com/static-assets/pdf/Assistant_Assistant_Manager_Recruitment_Detailed_Advertisement.pdf?crafterSite=lichfl-corporate-website-cms என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lic Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment