Madras University Results 2019 declared in unom.ac.in : சென்னை பல்கலைக்கழக யுஜி, பிஜி தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை unom.ac.in இணையதளத்தில் ‘செக்’ செய்வது எப்படி?
சென்னை பல்கலைகழகத்தில் பி.ஏ.பி.எஸ்.சி. பி,காம். மற்றும் எம்பிஏ, எம்சிஏ, எம்.ஏ. எம்.எஸ்சி. எம்.காம் படிப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள், இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகின.
Madras university results 2019 @unom.ac.in
University of madras ug pg results 2019 @unom.ac.in: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்
6:50 Pm: சென்னை பல்கலைக்கழக இணையதளமான http://www.unom.ac.in/ -ல் ரிசல்ட்டை பார்க்கலாம்.
1. இணையதளத்திற்குள் ரிசல்ட் பகுதியை க்ளிக் செய்யவும்.
2. ரிசல்ட் வெளியான இரு சர்வர்கள் அதில் டிஸ்பிளே ஆகும்.
3. இரு சர்வர்களில் ஏதாவது ஒரு லிங்கை க்ளிக் செய்யவும்.
4. பதிவு எண்ணை பதிவு செய்து ஏப்ரல் 2019 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
Madras university results @unom.ac.in: சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள்
6:40PM: ரிசல்ட் வெளியானது. தேர்வர்கள் சென்னை பல்கலைக்கழக இணையதளமான http://www.unom.ac.in/ -ல் ரிசல்ட்டை பார்க்கலாம்.
5:50 PM: சென்னை பல்கலைக்கழக இணையதளங்கள் தொடர்ந்து டிராபிக் காரணமாக முடங்கி கிடக்கின்றன. எனவே தேர்வர்களால் புதிதாக எந்தத் தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியவில்லை
4:50 PM: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, இரவு 7 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிட இருப்பதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கிடைக்கும் தகவல்கள் உடனுக்குடன் இந்தத் தளத்தில் பதிவு செய்யப்படும்.
4.20 PM: பல்கலைக்கழக இணையதளத்தில் தேர்வு முடிவு இன்று மாலை வெளியாகும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேரம் குறிப்பிடப்படவில்லை. மாலை 5 மணிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
4:00 PM: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாகும் என தெரிகிறது. மாணவர்கள் மொத்தமாக இணையதளத்தை பார்க்க முயற்சிப்பதால், அது முடங்கியது. அதை சரி செய்யும் பணியில் பல்கலைக்கழக அதிகாரிகள் இருக்கிறார்கள்.
தேர்வு முடிவுகள், சென்னை பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.unom.ac.in பார்க்கலாம் என்று பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் அதே இணையதளத்திலேயே, மறுமதிப்பீடு குறித்த விபரங்கள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைகழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. பார்ப்பது எப்படி?
தேர்வு முடிவுகளை அதிகளவிலான மாணவர்கள் பார்க்கக்கூடும் என்பதால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
www.results.unom.ac.in
unom.ac.in
egovernance.unom.ac.in
ideunom.ac.in
இருந்தபோதிலும் அதிகளவிலான மாணவர்கள் தேர்வுமுடிவுகளை பார்த்துக்கொண்டிருப்பதால், அந்த இணையதளங்கள் அதிக டிராபிக்கின் காரணமாக அந்த இணையதளம் சிறிதுநேரம் முடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.