சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள்:
கடந்த நவம்பர் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம், பி.சி.ஏ. உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளுக்கான ஒற்றைப்படை( 1, 3, 5) செமஸ்டர் தேர்வுகளும், எம்.ஏ., எம்.எஸ்.சி, எம்.காம் உள்ளிட்ட முதுநிலை மாணவர்களுக்கான ஒற்றைப்படை( 1, 3, 5) செமஸ்டர் தேர்வுகளும் (1, 3 ) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த செமஸ்டர் தேர்வு முடிவுகளை ஜனவரி கடைசி வாரத்தில் வெளியிடுவது வழக்கம். எனவே, இந்த ஆண்டும் கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்வு முடிவுகளை ஜனவரியில் வெளியிடயிருக்கிறது சென்னை பல்கலைக்கழகம்.
அரசு கல்லூரி ஆசிரியர்கள் சம்பள உயர்வு, 280% வரை அதிகரிப்பு
egovernance.unom.ac.in
தேர்வு முடிவுகள் குறித்து பலகலைக் கழகத்தில் இருந்து இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும், ஜனவரி 31ம் தேதி முன்னரே தேர்வு முடிவுகள் வெளியிட தயராகி கொண்டிருப்பதாக பல்கலைகழக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு
தேர்வு முவுகளை எப்படி பார்ப்பது?
சென்னை பல்கலைகழக தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களில் பார்க்கலாம்.
- www.results.unom.ac.in
- egovernance.unom.ac.in
- unom.ac.in
- ideunom.ac.in
இணையதளத்திற்குள் நவம்பர்-டிசம்பர் 2019 செமஸ்டர் தேர்வு முடிவுகள் என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ரிசல்ட் வெளியான இரு சர்வர்கள் அதில் டிஸ்பிளே ஆகும்.
இரு சர்வர்களில் ஏதாவது ஒரு லிங்கை க்ளிக் செய்யவும்.
பதிவு எண்ணை பதிவு செய்து ஏப்ரல் 2019 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
சென்னை பலகலைக்கழகம்:
சென்னை பல்கலைகழகம் இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது.