Advertisment

மதுரை கேந்திரிய வித்யாலயா வேலை வாய்ப்பு; தகுதி, சம்பளம் என்ன?

மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள்; தேர்வு இல்லை; முழு விவரம் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
KV School Madurai

மதுரை கேந்திரிய வித்யாலயா (புகைப்படம்: பள்ளி இணையதளம்)

மதுரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா (KENDRIYA VIDYALAYA) பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

மத்திய அரசு பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் மொத்தம் 1,245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் 59 கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளும், வெளிநாடுகளில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 14 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆங்கிலம், ஹிந்தி ஆகியவை இந்த பள்ளிகளில் பயிற்று மொழியாக உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: தமிழக அரசு வேலைவாய்ப்பு கண்காட்சி: சென்னை மக்களே பயன்படுத்துங்க!

இந்தநிலையில், மதுரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

Primary Teacher (HINDI)

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் B.Ed முடித்திருக்க வேண்டும். ஹிந்தி தெரிந்திருப்பது அவசியம்

சம்பளம்: ரூ. 21,250

Trained Graduate Teacher (Sanskrit)

கல்வித் தகுதி: சமஸ்கிருதத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் B.Ed முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 26,250

Post Graduate Teacher (Biology)

கல்வித் தகுதி: Master’s Degree in Botany/ Zoology/ Life Sciences / Bio Sciences/ Genetics/ Micro Biology/ Bio Technology/ Molecular Bio/ plant physiology மற்றும் B.Ed முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 27,500

Post Graduate Teacher (Economics)

கல்வித் தகுதி: Master’s Degree in Economics மற்றும் B.Ed முடித்திருக்க வேண்டும். ஹிந்தி தெரிந்திருப்பது அவசியம்

சம்பளம்: ரூ. 27,500

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ளவர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 24.06.2023

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: KENDRIYA VIDYALAYA NO. 2 MADURAI- 625005

மேலும் விவரங்களுக்கு https://no2madurai.kvs.ac.in/sites/default/files/WALK%20IN%20INTERVIEW%2024%20JUNE%202023.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai Jobs Kendriya Vidyalaya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment