Advertisment

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jobs

அரசு வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant) மற்றும் திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர் (Programme cum Administrative Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்! உடனே விண்ணப்பிங்க!

மாவட்ட தர ஆலோசகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Dental/ AYUSH/ Nursing/ Social Science/ Life Science/ Master in Health Administration / Master in Public Health / Health Management / Masters in Epidemiology  படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 40,000

திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2023/05/2023051921.pdf அல்லது https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2023/05/2023051966-1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 5 ஆம் நம்பர் புதுத்தெரு நல்லத்துக்குடி மெயின்ரோடு, மயிலாடுதுறை – 609001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.06.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2023/05/2023051977.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment