Advertisment

ஆவின் வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

நாமக்கல் மாவட்ட ஆவின் நிறுவன வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aavin tn

ஆவின் நிறுவன வேலை வாய்ப்பு

நாமக்கல் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Veterinary Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : B.V.Sc & A.H படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 29.08.2023

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : பொது மேலாளர், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், E.B Colony (அஞ்சல்), பரமத்தி ரோடு, நாமக்கல் – 637001.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2023/08/2023082344.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப்  பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aavin Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment