தமிழ்நாடு அரசின் மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள ஆய்வுக்கூட நுட்புநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: இந்தியன் ஆயில் நிறுவன வேலை வாய்ப்பு; 1535 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!
ஆய்வுக்கூட நுட்புநர் (Lab Technician)
காலியிடங்களின் எண்ணிக்கை : 31
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். (B.Sc Chemistry or Bio-Chemistry and DMLT)
வயதுத் தகுதி : 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 15,000
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுய விவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எண். 353, பெருந்திட்ட வளாகம், சிலுவம்பட்டி (அ), நாமக்கல், நாமக்கல் மாவட்டம் - 637003
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil