கொரோனா வைரஸ் பரவல் உலகின் ஒட்டுமொத்த ஓட்டத்தையும் நிறித்தியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வாரியத் தேர்வுகள் தொடங்கி மருத்துவம்/பொறியியல் நுழைவுத் தேர்வுகள் உள்ளிட்ட பல முக்கியமான தேர்வுகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளன. உதாரணாமாக, மே மாதம் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு (ஜேஇஇ மெயின்) மற்றும் நீட் தேர்வுகள், அந்த மாதம் இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வர்களுக்கு உண்மையில் இதை வரப்பிரசாதம் என்றே கூறலாம். தற்போதைய நேரத்த்தை உன்னிப்பாக திட்டமிடப்பட்டால், இந்த ஆட்டத்தின் போக்கை நீங்கள் மாற்றலாம் . இந்த கூடுதல் நேரத்தை, பலவீனமாக உணரும் பகுதிகளில் அதிக கவனம் செல்லுத்துங்கள், நன்கு தெரிந்த பகுதிகளை மேலும் தெளிவடைந்து கொள்ளுங்கள்.
இந்த கூடுதல் நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் இன்னும் திட்டமிடவில்லை என்றால், கீழே குறிப்பிடப்படும் உதவிக்குறிப்புகள் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.
ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
தினசரி முயற்சி தேவை: முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்ற பலமொழிகேற்ப நாம் உழைக்க வேண்டும்.நமது அன்றாட எடுக்கும் முயற்சி போர்களத்தில் வெற்றியை எளிதாக்குகிறது. கடந்த ஆண்டு கேள்வித் தாள்களை தீர்ப்பது,மாக் டெஸ்ட் எழுதுவது உங்களது வெற்றியை எளிதாக்கும். ஒரு மாக் டெஸ்ட் எழுதிய பிறகு, குறைந்தது 30 நிமிடங்களாவது அதைப் பகுப்பாய்வு செய்து உங்கள் பலங்களையும், பலவீனங்களையும் தெரிந்து கொள்ள முன்வாருங்கள்.
மற்றவர்களின் தேர்வு யுக்தியை நீங்கள் பின்பற்றாதிர்கள்: மற்றவர்கள் எவ்வாறு தயாராகின்றனர் என்பது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? இன்னும் போட்டி போட்டுக் கொண்டு புதிய புத்தகங்களையும் குறிப்புகளையும் வாங்கிக் கொண்டிருக்கிறீர்களா? உடனடியாக இந்த பழக்கத்தை மாற்றி விடுங்கள். உங்களிடம் கவனம் செலுத்துங்கள்.
நீங்கள் அவ்வபோது எடுத்த நோட்ஸ்களை,முழுமையாகப் பாருங்கள். மனிதர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். தேர்வுக்கான உங்களது முயற்சி தனித்துவமாக இருக்க வேண்டும். குறிப்பாக அந்த முயற்சி உங்கள் பலங்களையும், பலவீனங்களையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
நீட் தேர்வு: முக்கிய 'டாபிக்'கள், தயாராகும் வியூகங்கள் இங்கே!
அட்டவனையை உருவாக்குங்கள் : நுழைவுத் தேர்வுகளுக்குத் தோன்றும் மாணவர்களுக்கு தினசரி அட்டவணையே சிறந்த ஆசானாகும். ஒரு நாளைக்கு குறைந்தது 9-10 மணிநேரம் படிக்க கற்று கொள்ளுங்கள். அவ்வபோது சிறிய இடைவெளிகளை எடுத்து கொள்ளுங்கள். சமூக ஊடகங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். எல்லா பாடங்களுக்கும் சமமான நேரத்தை வழங்குங்கள். நீங்கள் பலவீனமாக இருக்கும் தலைப்புகளில் அதிக நேரத்தை செலவிட மறக்காதீர்கள் .
2021 ஆம் ஆண்டில் தோன்றும் மாணவர்கள், வகுப்புகள் துவங்க முடியாததால், நேரத்தை வீணாக்குகிறோம் என்று உணரவேண்டாம். கோடைகால விடுமுறை நாட்களை பயன்படுத்திக்கொள்ள பள்ளிகளும், பயிற்சி மையங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையில், குறைந்த வழிகாட்டல் தேவைப்படும் பாடங்களுக்கு நீங்கள் தயாராவதைத் தொடங்கலாம்.
இந்த ஆண்டு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், உடல் ஆரோக்கியம்,மன அழுத்தம் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்துங்கள் . ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, மன அமைதியை பேணிக் காப்பது மிக முக்கியம்.
எம்பிபிஎஸ் மட்டுமல்ல... நீட் வெற்றிக்கு பிறகு உங்களுக்கு இத்தனை வாய்ப்புகள்!
இதுவரை நாம் இதுபோன்ற சூழலை கடந்து வந்ததில்லை. சூழ்நிலையின் தீவிரத்தை பொறுத்து தேர்வுகள் மேலும் ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன . அனைத்து மாணவர்களும் நம்பிக்கையாக இருக்கவும், பயிற்சியைத் தொடரவும்.நேரத்தை திறம்பட பயன்படுத்தி,அதை சிறப்பாகப் பயன்படுத்தவும் கேட்டுக்கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.