தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுச் சென்றால், தமிழக மாணவர்களுக்கு கூடுதல் கிடைக்கும். இதன் மூலம் கட் ஆஃப் கணிசமாக குறையும். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைகான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான கட் ஆஃப் குறையும் என கல்வியாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: MBBS Expected Cut Off: பி.சி பிரிவு எம்.பி.பி.எஸ் கட் ஆஃப்; கல்லூரி வாரியாக விவரம் இங்கே
இது தொடர்பாக கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5050 இடங்கள் உள்ளன. இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரியில் 175 இடங்கள் உள்ளன. இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு கூடுதலாக 50 இடங்கள் சேர்க்கப்படுகிறது. எனவே மொத்தம் 5225 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15% இடங்கள் சென்றுவிடும். மீதமுள்ள 85% என்பது 4441 இடங்கள். இதில் 45 இடங்கள் இ.எஸ்.ஐ ஒதுக்கீட்டுக்குச் சென்று விடும். எனவே மீதமுள்ள 4396 இடங்கள் மாநில ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். இதில் 7.5% இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். எனவே மீதமுள்ள 4066 இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 330 இடங்கள் கிடைக்கும்.
இதில் பிரிவு வாரியாக கிடைக்கக் கூடிய இடங்களின் எண்ணிக்கை
பொதுப் பிரிவு – 1260
BC – 1078
BCM – 142
MBC – 813
SC – 610
SCA – 122
ST – 41
தரவரிசைப் பட்டியலின்படி பொதுப் பிரிவுக்குள் 122 எஃப்.சி மாணவர்களும், 801 பி.சி மாணவர்களும், 49 பி.சி முஸ்லீம் மாணவர்களும், 236 எம்.பி.சி மாணவர்களும், 49 எஸ்.சி மாணவர்களும், 3 எஸ்.சி.ஏ மாணவர்களும் உள்ளனர். இவர்கள் பொதுப்பிரிவு இடங்களை எடுத்துவிடுவார்கள்.
எதிர்ப்பார்க்கப்படும் ரேங்க்
பொதுப் பிரிவு – 1260
BC – 1879
BCM – 191
MBC – 1049
SC – 659
SCA – 125
ST – 41
எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் (Safer Cut Off)
பொதுப் பிரிவு – 609
BC – 561
BCM – 542
MBC – 532
SC – 455
SCA – 382
ST – 357
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்குச் சென்றால், தமிழக மாணவர்கள் கூடுதலாக மருத்துவராக முடியும்.
தற்போது தமிழகத்தில் உள்ள முக்கிய மருத்துவக் கல்லூரிகளில் எந்த ரேங்க் மற்றும் எந்த கட் ஆஃப் வரை உள்ளவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
மெட்ராஸ் மருத்துவ கல்லூரி, சென்னை ரேங்க் மற்றும் கட் ஆஃப் விவரம்
பிரிவு | AIQ ரேங்க் | கட் ஆஃப் |
OC | 797 | 690 |
OC - EWS | 3951 | 665 |
BC | 1294 | 684 |
BCM | 1294 | 684 |
MBC | 1294 | 684 |
SC | 12027 | 636 |
SCA | 12027 | 636 |
ST | 60787 | 560 |
எனவே அகில இந்திய ஒதுக்கீட்டில் இந்த ரேங்க் வரை உள்ளவர்கள் இடம் பெற்றால், தமிழக மாணவர்களுக்கு 104 இடங்கள் கிடைக்கும்.
தற்போது எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் மற்றும் ரேங்க்
பிரிவு | ரேங்க் | கட் ஆஃப் |
OC | 1364 | 605 |
BC | 1939 | 559 |
BCM | 196 | 541 |
MBC | 1079 | 530 |
SC | 664 | 454 |
SCA | 125 | 382 |
ST | 41 | 357 |
ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, சென்னை ரேங்க் மற்றும் கட் ஆஃப் விவரம்
பிரிவு | AIQ ரேங்க் | கட் ஆஃப் |
OC | 1778 | 680 |
OC - EWS | 7535 | 655 |
BC | 3192 | 668 |
BCM | 3192 | 668 |
MBC | 3192 | 668 |
SC | 20136 | 618 |
SCA | 20136 | 618 |
ST | 72403 | 540 |
எனவே அகில இந்திய ஒதுக்கீட்டில் இந்த ரேங்க் வரை உள்ளவர்கள் இடம் பெற்றால், தமிழக மாணவர்களுக்கு 221 இடங்கள் கிடைக்கும்.
தற்போது எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் மற்றும் ரேங்க்
பிரிவு | ரேங்க் | கட் ஆஃப் |
OC | 1481 | 601 |
BC | 2015 | 556 |
BCM | 201 | 538 |
MBC | 1103 | 528 |
SC | 666 | 454 |
SCA | 125 | 382 |
ST | 41 | 357 |
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.