தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் எவ்வளவு இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைகான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒவ்வொரு பிரிவுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளின் இடங்களுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு? முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்றுகளில் எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எவ்வளவு என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
இதையும் படியுங்கள்: எம்.பி.பி.எஸ் அட்மிஷன்: அகில இந்திய கோட்டாவில் தமிழக மாணவர்கள் சேர்வது எப்படி? அரசு முக்கிய அறிவிப்பு
நீட் கட் ஆஃப் மதிப்பெண்கள் தொடர்பாக கிளாசிக் நீட் அகாடமி யூடியூப் சேனலில் டாக்டர் பெரியசாமி முழுமையாக விளக்கம் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில், தமிழ்நாடு மருத்துவ சேர்க்கை வாரியம் வெளியிட்டுள்ள சீட் மேட்ரிக்ஸ் படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5175 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15% இடங்கள் சென்றுவிடும். மீதமுள்ள 85% இடங்கள் அதாவது 4398 இடங்கள் மாநில ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். இதில் 7.5% இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். எனவே மீதமுள்ள 4068 இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
இதில் பிரிவு வாரியாக கிடைக்கக் கூடிய இடங்களின் எண்ணிக்கை
பொதுப் பிரிவு – 1261
BC – 1078
BCM – 142
MBC – 813
SC – 610
SCA – 122
ST – 41
இதில் ஒரு சில இடங்கள் மாறுபடலாம்.
எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 609
BC – 561
BCM – 542
MBC – 532
SC – 455
SCA – 382
ST – 357
எனவே கடந்த முறையை விட ஒவ்வொரு பிரிவிலும் 30 மதிப்பெண்கள் வரை கட் ஆஃப் உயர்ந்துள்ளது.
முதல் சுற்றுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 605
BC – 558
BCM – 542
MBC – 531
SC – 457
SCA – 382
ST – 357
இரண்டாம் சுற்றுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 602
BC – 555
BCM – 541
MBC – 530
SC – 451
SCA – 382
ST – 357
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.