நீட் தேர்வில் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் முதல் 10 இடங்களை பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் தரவரிசை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Advertisment
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைகான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இதனையடுத்து அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 15 மேல் பெற்றுள்ளனர். இந்தநிலையில், முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வரிசை எண்
மாணவர் பெயர்
நீட் மதிப்பெண்
பள்ளியின் பெயர்
1
கிருத்திகா
569
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேலம்
2
பச்சையப்பன்
565
அரசு மேல்நிலைப் பள்ளி, மங்கரை, தருமபுரி
3
முருகன்
560
அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி, மௌல்வாக்கம், காஞ்சிபுரம்
4
ரோஜா
544
சண்முகா இண்டஸ்ட்ரிஸ் அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை
5
அன்னபூரணி
538
அரசு மேல்நிலைப் பள்ளி, உலகம்பட்டி, சிவகங்கை
6
அர்ச்சனா
537
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேலம்
7
அன்னபூரணி
533
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உடையார்பாளையம், அரியலூர்
8
புகழேந்தி
531
அரசு மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்
9
கணேஷ்
530
வி.எம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம், தேனி
10
சாம்
523
அரசு மேல்நிலைப் பள்ளி, காசிநாயக்கன்பட்டி, திருப்பத்தூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil