Advertisment

TN MBBS Counselling; தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்; ஆகஸ்ட் 25-ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்; ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஆன்லைன் மூலம் தொடங்குகிறது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கலந்தாய்வு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Counselling

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு (பிரதிநிதித்துவ படம்)

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகின்ற 25 ஆம் தேதி முதல் தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 6326 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதே போல அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1768 பி.டி.எஸ் இடங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்: MBBS Expected Cut Off: எஸ்.சி பிரிவு எம்.பி.பி.எஸ் கட் ஆஃப்; கல்லூரி வாரியாக விவரம் இங்கே

அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான ரேங்க் பட்டியல் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில், கவுன்சிலிங் உத்தேசமாக 25 ஆம் தேதி தொடங்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்குவதை பொறுத்து தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கும். எனவே கலந்தாய்வு தேதி உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு ஜூலை 20 ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கியது. தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 15% அதாவது 822 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசு மருத்துவ கல்லூரிகளில் இருந்து 762 எம்.பி.பி.எஸ். இடங்களும், ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 23 இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 37 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் கலந்தாய்வு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 25 ஆம் தேதி முதல் பொது கலந்தாய்வு ஆன்லைன் வழியாக தொடங்குகிறது. நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இக்கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்ற மருத்துவக் கல்வி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கலந்தாய்வு ஜூலை 25 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இருக்கை ஒதுக்கீடு ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெறும். முடிவுகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்படும். தற்காலிக இருக்கை ஒதுக்கீடு ஆணை 4 ஆம் தேதி முதல் கிடைக்கும், ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர்க்கைப் பெற வேண்டும்.

அதேநேரம், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு கலந்தாய்வு சென்னையில் நேரடியாக நடத்தப்படும். அவை எந்தந்த தேதியில் நடைபெறும் என்ற விவரங்கள் மருத்துவ கல்லூரி இணைய தளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment