இந்த ஆண்டு முதல் ஜிப்மெர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிகளில் படிப்பதற்கும் நீட் கட்டாயமாகிறது என்பதால் இந்த வருடம் நடைபெற இருக்கும் நீட் மிகவும் சவால் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு முதல் ஜிப்மெர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிகளில் படிப்பதற்கும் நீட் கட்டாயமாகிறது என்பதால் இந்த வருடம் நடைபெற இருக்கும் நீட் மிகவும் சவால் மிக்கதாகவும் போட்டிகள் வாய்ந்ததாகவும் இருக்கும்.
Advertisment
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?
ஜனவரி 6ம் தேதியோடு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவுற்றாலும், விண்ணப்ப படிவத்தை ntaneet.nic.in என்ற இணையத்திற்கு சென்று ஜனவரி 31ம் தேதிக்குள் ஏதேனும் தவறுகளை திருத்திக் கொள்ள இயலும்
ஜிப்மெர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கும் நீட் அவசியம் என்பதால் இந்த முறை தேர்வர்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தேர்வு எழுத 15,93,452 தேர்வர்கள் விண்ணிப்பித்துள்ளனர்.
நீட் வினாத்தாளில் 180 மல்டிபல் சாய்ஸ் கேள்விகள் (MCQ) இருக்கும். அதாவது, ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு விருப்பங்களில் ஒரு சரியான பதிலை தேர்வர்கள் தேர்வு செய்ய வேண்டும் . இயற்பியல், வேதியியல் உயிரியல் போன்றவைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
இந்த நீட் தேர்வில் தகுதி பெற, 50 சதவீதம் (அல்லது) மதிப்பெண் அடிப்படையில் 701 முதல் 134 மதிப்பெண்கள் பெறவேண்டும் . அரசு இடஒதுக்கீடுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள தேர்வர்கள் அளவுகோலில் 40 சதவீத மதிப்பெண்களையும், உடல் ஊனமுற்றோர் (பி.எச்) பிரிவு தேர்வர்கள்,அளவுகோலில் 45 சதவீத மதிப்பெண்களையும் பெற வேண்டும்.
நீட் தேர்வுக்கு, தேவைப்படும் புத்தகங்கள்: NCERT Biology Booster by Shri Balaji Publications, NCERT Fingertips by MTG Editorial board,Chemistry for NEET by Cengage Publications,Organic chemistry by Morrison and Boyd,GRB Concept of Inorganic Chemistry by OP Tandon, concepts of Physics by HC Verma, 32 Years NEET Chapter-wise & Topic-wise Solved Papers Physics by Disha publications
ஜூன் 4ம் தேதி இந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு முடிக்கும் மாணவர்கள் கவுன்சிலிங்க் முறையில் மருத்துவம் படிக்க அனுமதிப்பார்கள்