NEET 2023 கவுன்சிலிங்: அகில இந்திய மற்றும் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் 2023 விரைவில் தொடங்க உள்ளது. இந்தநிலையில், மாணவர்கள் முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டிய இணையதளங்களின் பட்டியல் இங்கே.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) 2023 இன் முடிவுகள் ஜூன் 13 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக அகில இந்திய ஒதுக்கீட்டு (AIQ) இடங்கள் மற்றும் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங் நடைபெறும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மருத்துவ சீட் பெற இந்த கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: NEET UG 2023: நீட் தேர்வு எழுதிய 12,997 அரசு பள்ளி மாணவர்களில் 3,982 பேர் தகுதி; தேர்ச்சி விகிதம் 4% அதிகரிப்பு
இந்தியாவில் மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு 15% மற்றும் மாநில ஒதுக்கீட்டுக்கு 85% எனப் பிரிக்கப்பட்டுள்ளன. MBBS மற்றும் BDS படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநிலங்கள் தாங்களாகவே நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றன. அதேநேரம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான நீட் கவுன்சிலிங்கை மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) நடத்துகிறது.
கடந்த ஆண்டு தரவுகளின் அடிப்படையில், நீட் கவுன்சிலிங் செல்லும் மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான இணையதளங்கள்:
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங்
மருத்துவ ஆலோசனைக் குழு (MCC): mcc.nic.in
ஆயுஷ் சேர்க்கை மத்திய ஆலோசனைக் குழு (AACCC): aaccc.gov.in
மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான நீட் கவுன்சிலிங்
தமிழ்நாடு: tnmedicalselection.net
புதுச்சேரி: centacpuducherry.in
ஆந்திரப் பிரதேசம்: ntruhs.ap.nic.in
அசாம்: dme.assam.gov.in
அருணாச்சல பிரதேசம்: apdhte.nic.in
பீகார்: bceceboard.bihar.gov.in
சண்டிகர்: gmch.gov.in
கோவா: dte.goa.gov.in
சத்தீஸ்கர்: cgdme.in
குஜராத்: medadmgujarat.org
ஹரியானா: dmer.haryana.gov.in
ஜம்மு மற்றும் காஷ்மீர்: jkbopee.gov.in
ஜார்கண்ட்: jceceb.jharkhand.gov.in
கேரளா: cee.kerala.gov.in
கர்நாடகா: kea.kar.nic.in
மத்திய பிரதேசம்: dme.mponline.gov.in
மகாராஷ்டிரா: cetcell.mahacet.org
மேகாலயா: meghealth.gov.in
மணிப்பூர்: manipurhealthdirectorate.mn.gov.in
மிசோரம்: mc.mizoram.gov.in
நாகாலாந்து: dtenagaland.org.in
ஒடிசா: ojee.nic.in
ராஜஸ்தான்: இணையதளம் விரைவில் அறிவிக்கப்படும்
பஞ்சாப்: bfuhs.ac.in
திரிபுரா: dme.tripura.gov.in
உத்தரகாண்ட்: hnbumu.ac.in
உத்தரபிரதேசம்: upneet.gov.in
மேற்கு வங்காளம்: wbmcc.nic.in
பிற இணையதளங்கள்
தேசிய மருத்துவ ஆணையம் (NMC): nmc.org.in
இந்திய பல் மருத்துவ கவுன்சில் (DCI): dciindia.gov.in
ஹெல்த் சர்வீசஸ் டைரக்டர் ஜெனரல் (DGHS): dghs.gov.in.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil