நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது என இப்போது பார்ப்போம்.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வில் உயிரியல் பாடங்களில் இருந்து கேள்விகள் எளிமையாக கேட்கப்பட்டதாகவும், அதேநேரம் இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்வுக்கு வழங்கப்பட்ட நேரம் போதவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: TN 12th Results 2023: 8.8 லட்சம் மாணவர்கள் எதிர்பார்ப்பு; தமிழ்நாடு பிளஸ் டூ ரிசல்ட் தேதி, நேரம்; லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு நீட் தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும், இதில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு சரியான கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் என மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil