தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) தேசிய தேர்வு முகமையால் (NTA) மே 7, 2023 அன்று மதியம் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடத்தப்படும். நுழைவுத் தேர்வு 13 மொழிகளில் பேனா மற்றும் பேப்பர் முறையில் நடத்தப்படும்.
அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் இளங்கலை மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆயுதப்படை மருத்துவ சேவை மருத்துவமனைகளில் நடத்தப்படும் ராணுவ நர்சிங் திட்டத்தின் மூலம் பி.எஸ்.சி நர்சிங் படிப்பில் சேர விரும்பும் ஆர்வலர்களுக்கும் நீட் மதிப்பெண் பயன்படுத்தப்படும்.
இதையும் படியுங்கள்: ஐ.ஐ.டி மெட்ராஸ் வழங்கும் ‘அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங்’ கணித படிப்பு; இலவசமாக படிக்கலாம்!
NEET (UG) 2023: தகுதிக்கான அளவுகோல்கள்
– 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் NEET தேர்வை எழுதலாம், ஆனால் முதல் சுற்று கவுன்சிலிங்கின் போது தகுதி பெற்ற தேர்ச்சி சதவீதம் பூர்த்தி செய்யப்படாவிட்டால் இளங்கலை படிப்புகளில் சேர்க்கைக்கு தகுதி பெற மாட்டார்கள்.
– திறந்தநிலைப் பள்ளியில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் அல்லது தனிப்பட்ட தேர்வாளர்களாக இருப்பவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
– அறிவியலில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்/பயோடெக்னாலஜி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
– இந்தியப் பல்கலைக்கழகத்தின் பி.எஸ்.சி படித்தவர்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்)/பயோடெக்னாலஜி ஆகியவற்றைக் கொண்ட குறைந்தபட்சம் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NEET (UG) – 2023: ஒரே மதிப்பெண் பெற்றவர்களுக்கான டை-பிரேக்கிங் அளவுகோல்கள்
NEET UG 2023 இல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், பின்வரும் டை-பிரேக்கிங் அளவுகோல்கள் பயன்படுத்தப்படும்
– உயிரியலில் (தாவரவியல்/விலங்கியல்) அதிக மதிப்பெண்கள் அல்லது சதவீதம் பெற்றவர்கள்.
– வேதியியலில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள்.
– இயற்பியலில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள்.
– அனைத்து பாடங்களிலும் சரியான பதில்களை விட குறைவான தவறான பதில்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள்.
– உயிரியலில் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) சரியான பதில்களுக்கு மிகக் குறைந்த விகிதத்தில் தவறான பதில்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள்.
– வேதியியலில், சரியான பதில்களுக்கு தவறான விடைகளின் விகிதத்தைக் குறைவாகக் கொண்ட விண்ணப்பதாரர்கள்.
– இயற்பியலில் தவறான பதில்களை முயற்சித்ததில் குறைவான சதவீதத்தைக் கொண்ட விண்ணப்பதாரர்கள்.
– அதிக வயது
– நீட் விண்ணப்ப எண் ஏறுவரிசையில்.
மேலே குறிப்பிடப்பட்ட டை-பிரேக்கர் அளவுகோல்கள் மிக முக்கியமானவையில் இருந்து குறைவான முக்கியத்துவம் வாய்ந்த வரிசையில் உள்ளன.
NEET UG 2023 நாடு முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை பெற உதவும். நீட் தேர்வு இந்திய நகரங்களிலும், வெளிநாடுகளிலும் நடத்தப்படும். NEET 2023 UG முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil