Advertisment

NEET Counselling: நீட் கவுன்சிலிங்கில் எந்த ரேங்கிற்கு எந்த கல்லூரி கிடைக்கும்?

நீட் கவுன்சிலிங் அகில இந்திய ஒதுக்கீடு; எந்த வரை எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பது இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET exam students

நீட் தேர்வு

மருத்துவ படிப்புகளுக்கான நீட் கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், எந்த தரவரிசையில் உள்ளவர்கள் எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (NEET UG 2023) முடிவுகள் ஜூன் 13 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. வியத்தகு அளவில் தேர்வெழுதியவர்களில் 11,45,976 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் சேர்க்கை பெறுவது ஒவ்வொரு தகுதிவாய்ந்த தனிநபருக்கும் உத்தரவாதம் அளிக்கப்படாது, ஏனெனில் அது அவர்களின் அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) தரவரிசையைப் பொறுத்தது. சிறந்த கல்லூரிகளுக்கான அகில இந்திய ஓதுக்கீட்டு சேர்க்கை பொதுவாக கட்-ஆஃப்கள், நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகளால் தீர்மானிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: இந்த ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு துணைத் தொகுதிகள் கிடையாது – மருத்துவ கவுன்சில்

35,000 முதல் 40,000 வரையிலான AIQ தரவரிசையில் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை கிடைக்கும் கல்லூரிகள்:

ஆர்.ஜி கார் மருத்துவக் கல்லூரி, கொல்கத்தா.

காந்தி மருத்துவக் கல்லூரி, போபால்.

மைசூர் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மைசூர்.

அரசு மருத்துவக் கல்லூரி, கண்ணூர்.

டாக்டர் ஆர்.என் கூப்பர் மருத்துவக் கல்லூரி, ஜூஹூ மும்பை.

அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் மருத்துவக் கல்லூரி, தாண்டா.

MG இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், சேவாகிராம் வார்தா

சர்தார் படேல் மருத்துவக் கல்லூரி, பிகானேர்.

அரசு மருத்துவக் கல்லூரி, கோழிக்கோடு

அகில இந்திய தரவரிசை 40,000 முதல் 45,000 வரை உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை கிடைக்கும் கல்லூரிகள்:

கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி, கொல்கத்தா.

கோவா மருத்துவக் கல்லூரி, பனாஜி.

R.N.T மருத்துவக் கல்லூரி, உதய்பூர்.

SHKM GMC, நல்ஹர், ஹரியானா.

அரசு டூன் மருத்துவக் கல்லூரி, டேராடூன்.

மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரி, அலகாபாத்

குரு கோவிந்த் சிங் மருத்துவக் கல்லூரி, ஃபரித்கோட்.

அரசு மருத்துவக் கல்லூரி, கொல்லம்

நேதாஜி சுபாஷ் சந்திரா கல்லூரி, ஜபல்பூர்

அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம்.

AIQ ரேங்க் 45,000 முதல் 50,000 வரை உள்ளவர்களுக்கு சேர்க்கை கிடைக்கும் கல்லூரிகள்:

கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள ESI-PGIMSR,

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி,

துங்கர்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment