NEET UG 2023 கவுன்சிலிங்: கேரளாவில், 2023-24 கல்வியாண்டுக்கான கேரள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட வட்டப்பாரா, திருவனந்தபுரத்தில் உள்ள SUT மருத்துவ அறிவியல் அகாடமியின் கூடுதல் 50 எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்களின் சீட் மேட்ரிக்ஸை கேரளாவில், நுழைவுத் தேர்வு ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. தற்போது எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 150 ஆக உள்ளது.
50 இடங்களில், 8 இடங்கள் என்.ஆர்.ஐ.,களுக்கும், 8 அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் (மொத்த இடங்களில் 15 சதவீதம்) மற்றும் 34 இடங்கள் அரசு இட ஒதுக்கீடு விதிமுறைகளின்படி ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்: எம்.பி.பி.எஸ் அட்மிஷன்: அகில இந்திய கோட்டாவில் சீட் பெறுவது எப்படி?
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின்படி முதல் 50 இடங்களுக்குள் வந்த கேரளாவில் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளைப் பாருங்கள்.
NIRF தரவரிசை 10 – ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
NIRF தரவரிசை 44 - அரசு மருத்துவக் கல்லூரி, திருவனந்தபுரம்
NIRF தரவரிசை 25 - அரசு பல் மருத்துவக் கல்லூரி, திருவனந்தபுரம்
அட்டவணையின்படி, இரண்டாவது சுற்று கவுன்சிலிங் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும். ஆகஸ்ட் 22 ஆம் தேதியுடன் சாய்ஸ் ஃபில்லிங் உறுதிப்படுத்தல் முடிவடையும் அதே வேளையில், ஆகஸ்ட் 23 முதல் 24 வரை இருக்கை ஒதுக்கீடு செயல்முறை நடைபெறும் மற்றும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தற்காலிக இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படும். இறுதி இட ஒதுக்கீடு பட்டியல் ஆகஸ்ட் 26 அன்று அறிவிக்கப்படும். மாணவர்கள் செப்டம்பர் 1 முதல் 4 வரை ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர்க்கைப் பெற வேண்டும்.
மூன்றாவது சுற்று இட ஒதுக்கீடு செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி முடிவடையும். மேலும், இறுதி காலியிடச் சுற்று செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 29 ஆம் தேதி முடிவடையும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.